Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குழந்தை பாக்கியம் வேணுமா? கைக்கொடுக்கும் ஐவிஎஃப் சிகிச்சை முறை! நோவா ஐவிஎஃப் மையம் முக்கிய அட்வைஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இயற்கையாக குழந்தை பெற இயலாத தம்பதிகள் ஐவிஎஃப் எனும் செயற்கை கருத்தரித்தல் முறையை பின்பற்றி குழந்தை பெற்றெடுக்கின்றனர். தமிழ்நாட்டில் நோவா ஐவிஎஃப் கருத்தரித்தல் மையம் இந்த சிகிச்சையை வழங்கி வருகிறது. இந்நிலையில் தான் சிகிச்சை எப்படி அளிக்கப்படும்? குழந்தை பெற்றெடுக்கும் சதவீதம் என்ன? செலவு எவ்வளவு வரும்? இந்த சிகிச்சை முறையால் பக்கவிளைவு ஏற்படுமா? என்பது பற்றி ஐவிஎஃப் கருத்தரித்தல் மையம் விரிவாக விளக்கி உள்ளது.

தற்போது பல தம்பதிகள் திருமணமாகியும் கூட குழந்தை இன்றி தவிக்கின்றனர். பெண்கள் 30 வயதை தாண்டியும், ஆண்கள் 35 வயதை கடந்தும் திருமணம் செய்யும்பட்சத்தில் பல தம்பதிகள் இந்த பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். மேலும் சிகரெட், மதுபானம் பழக்க வழக்கங்களும் தம்பதிகளுக்கு இயற்கை கருத்தரித்தலை தள்ளிப்போக செய்கிறது.

இப்படியான தம்பதிகளுக்கு செயற்கை கருத்தரித்தல் மையங்கள் கைக்கொடுக்கின்றனர். குறிப்பாக ஐவிஎஃப் எனும் முறையிலான செயற்கை கருத்தரித்தல் என்பது குழந்தை இல்லாத தம்பதிகளை பெற்றோர்களாக மாற்றி வருகிறது. ஐவிஎஃஎப் என்பது In vitro fertilization என அழைக்கப்படும் செயற்கை கருத்தரித்தல் முறையாகும்.

இந்த முறை என்பது பெண்ணின் கருமுட்டை, ஆணின் உயிரணுக்களை செயற்கை முறையில் ஒன்றாக இணைத்து கருத்தரித்தலை செய்வதாகும். அதாவது செயற்கை முறையில் மனைவியின் கருமுட்டையில் கணவரின் உயிரணுக்கள் சேர்க்கப்படும். இதற்காக பெண்ணின் கருமுட்டை, ஆணின் உயிரணு சேகரிக்கப்பட்டு ஆய்வகத்தில் ஒன்றாக இணைக்கப்படும். அதன்பிறகு 5வது நாட்களில் கருமுட்டை வளர தொடங்கியதும் மீண்டும் வயிற்றில் செலுத்தப்பட்டு கருவளர்ச்சி கண்காணிக்கப்பட்டு குழந்தை பிறக்க சிகிச்சை அளிக்கப்படும்.

இந்த முறையில் தற்போது பல தம்பதிகளை இந்த செயற்கை கருத்தரித்தல் முறையில் தாய், தந்தையாக்கி உள்ளது. இந்தியாவில் இந்த வகை கருத்தரித்தல் சிகிச்சையை நோவா ஐவிஎஃப் கருத்தரித்தல் மையம் (NOVA IVF Fertility) சிறப்பாக செய்து வருகிறது. இந்தியா முழுவதும் மொத்தம் 48 நகரங்களில் 72 மையங்களில் நோவா ஐவிஎஃப் கருத்தரித்தல் மையம் இயங்கி வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், திருச்சி, மதுரை, நாமக்கல், தேனி மாவட்டம் போடி உள்ளிட்ட இடங்களில், புதுச்சேரியில் நோவா ஐவிஎஃப் கருத்தரித்தல் மையம் செயல்பட்டு வருகிறது.

6ல் ஒரு ஜோடி: நோவா ஐவிஎஃப் கருத்தரித்தல் மையத்தில் வெளிப்படைத்தன்மை என்பது பின்பற்றப்பட்டு வருகிறது. மேலும் கருத்தரித்தல் சிகிச்சையை பற்றி யாரும் கவலை கொள்ள வேண்டாம். ஏனென்றால் தற்போது இந்த சிகிச்சை முறை என்பது பொதுவான ஒன்றாக மாறிவிட்டது. இன்னும் சொல்ல வேண்டுமனால் 6 ஜோடிகளில் ஒருவர் ஐபிஎஃப் கருத்தரித்தலை நாடும் நிலை உள்ளது. இந்த சிகிச்சைக்கு ஆண், பெண் என பேரின் இயலாமையும் காரணமாக உள்ளது. இதில் யாரும் யாரையும் குறை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

பல்வேறு சந்தேகங்கள்: இந்நிலையில் தான் பலருக்கும் ஐவிஎஃப் சிகிச்சை பற்றி பல சந்தேகங்கள் உள்ளன. சிகிச்சை எப்படி அளிக்கப்படும்? குழந்தை பெற்றெடுக்கும் சதவீதம் என்ன? செலவு எவ்வளவு வரும்? இந்த சிகிச்சை முறையால் பக்கவிளைவு ஏற்படுமா? என்பது பற்றி ஐவிஎஃப் கருத்தரித்தல் மையம் விரிவாக விளக்கி உள்ளது. இதுபற்றி நோவா ஐவிஎஃப் கருத்தரித்தல் மையம் கூறியுள்ளதாவது.

புரிதல் அவசியம்: ஏனெ்னறால் ஐவிஎஃப் கருத்தரித்தலை நாடும் தம்பதிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் 30 சதவீதம் பெண்களும், 30 சதவீதம் ஆண்களும், இன்னொரு 30 சதவீதம் ஆண்-பெண் என இருதரப்பும் இயற்கையாக குழந்தை பெற்றெடுக்கும் திறனை கொண்டிருக்கவில்லை. இதனால் ஒரு தம்பதிக்கு குழந்தை இல்லை என்றால் கணவன்-மனைவி என இருவரும் பரிசோதனைகள் செய்து கொள்வது முக்கியமானது. இதன் மூலம் தெளிவு பிறப்பதோடு தேவையில்லாத மனஅழுத்தம் நீங்கி கணவன்-மனைவி புரிதலுடன் குழந்தையை பெற்றெடுக்க முடியும்.

வெற்றி சதவீதம்: ஐவிஎஃப் கருத்தரித்தலை பொறுத்தமட்டில் குழந்தை பெற்றெடுக்கும் வெற்றி சதவீதம் என்பது பல காரணிகளை பொறுத்தது. ஜோடிகளின் வயது, அவர்களின் உடல்நலம், உயிரணு, கருமுட்டையின் தன்மை உள்ளிட்டவற்றை சார்ந்தது. இருப்பினும் மேலும் IUI, IVF அல்லது IVF-ICSI முறைகளில் பலர் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர். ஐவிஎஃப் கருத்தரித்தல் முறை என்பது ஊசி, மருந்து, தொடர் பரிசோதனைகளை உள்ளடக்கியது. இதனால் சில சமயங்களில் நம் அன்றாட செயல்பாட்டை பாதிக்கலாம். இதனால் ஐவிஎஃப் முறையில் குழந்தை பெற விரும்பும் தம்பதி தங்களின் பணி நேரம் பற்றிய விபரத்தை சிகிச்சை அளிக்கும் டாக்டரிடம் முழுமையாக பேசி முன்கூட்டியே திட்டமிடுவது சிறப்பானதாகும்.

பக்க விளைவு: ஐவிஎஃப் கருத்தரித்தல் முறையில் பக்கவிளைவு என்பது இருக்கலாம். பொதுவாக வீக்கம், தலைவலி, எரிச்சல் உணர்வு உள்ளிட்டவை பக்கவிளைவாக உள்ளன. இதனால் அதுபற்றி முன்கூட்டியே அறிந்த வைத்திருப்பது அவசியமாகும். மேலும் ஐவிஎஃப் சிகிச்சைக்கு முன்பே வாரிசு குறித்த மாற்று வழிகளை நாடலாமா? என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். அதாவது குழந்தை தத்தெடுப்பு முறை நாடலாம். ஆனாலும் தத்தெடுப்பு முறையில் நாட்டம் இல்லாமல் சொந்த வாரிசு வேண்டும் என விரும்புவோர் ஐவிஎஃப் முறையை உரிய புரிதலுடன் தேர்வு செய்யப்படும்.

செலவு எவ்வளவு: மேலும் இந்த சிகிச்சை முறையில் ஒவ்வொரு நபரின் அனுபவமும் தனித்தனியானது. இதனால் டாக்டர் அட்வைசுடன் உரிய வழிக்காட்டுதல் முறையில் சரியான புரிதலுடன் தான் இந்த சிகிச்சை முறையை தேர்வு செய்ய வேண்டும். மேலும் இந்த கருத்தரித்தல் முறைக்கான செலவை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் ஐவிஎஃப் முறை கருத்தரித்தலில் குழந்தை பெற்றெடுப்பதற்கு ஆகும் செலவு என்பது அதிகமாக இருக்கும். மேலும் இவ்வளவு தொகை தான் வரும் என நாம் முன்கூட்டியே சொல்லிவிட முடியாது. ஏனெ்னறால் சிகிச்சை முறை, அதற்கான காலம் உள்ளிட்டவற்றை பொருத்து செலவு என்பது மாறும். இதனால் காப்பீட்டு திட்டங்கள் மற்றும் இஎம்ஐ முறைகளை பயன்படுத்தலாமா என்பதை பற்றி தெரிந்து கொண்டு சிகிச்சை முறையை நாடலாம்.

மனதைரியம் அவசியம்: மேலும் இந்த ஐவிஎஃப் கருத்தரித்தல் என்பது குழந்தை கனவை நனவாக்கும் சிகிச்சை முறையாக இருந்தாலும் கூட கடைசியில் ஏமாற்றம், குழந்தை பெறும் சதவீதத்தில் சரிவு ஏற்படலாம். இதனால் அந்த மனநிலையையும் சமாளிக்கும் தைரியம் நிச்சயம் தம்பதிகளிடம் வேண்டும். மனநல நிபுணரிடமும் இதுபற்றி முன்கூட்டியே ஆலோசனைகளை பெறலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+