Home / Photos
PHOTOS: விஜய் ஆண்டனியின் மனைவியா இது? பலரும் பார்த்திடாத விஜய் ஆண்டனியின் குடும்ப புகைப்படங்கள்..
By Chandru
நடிகர், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மனைவி மற்றும் குடும்ப புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
1/8
Photo Credit: instagram
Share
நடிகர், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மனைவி மற்றும் குடும்ப புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
2/8
Photo Credit: instagram
Share
சினிமா துறையில் திரைப்பட இயக்குநர்களாக அறிமுகமாகி பின்னர் நடிகராக கலக்கிய பல பிரபலங்களை நாம் பார்த்திருப்போம்.. அந்தவகையில் இசையமைப்பாளராக திரை துறையில் அறிமுகமானவர் விஜய் ஆண்டனி.
3/8
Photo Credit: instagram
Share
கடந்த 2005ம் ஆண்டு சுக்ரன் என்ற திரைப்படத்திற்கு இசையமைத்து தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக விஜய் ஆண்டனி அறிமுகமானார். இப்படத்தை தெடர்ந்து நான் அவன் இல்லை, காதலில் விழுந்தேன், நினைத்தாலே இனிக்கும், வேட்டைக்காரன், வெடி உள்ளிட்ட பல படங்களுக்கு ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்.
4/8
Photo Credit: instagram
Share
தமிழ் சினிமாவில் விஜய் ஆண்டனிக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது, அதிலும் 90ஸ் கிட்ஸ் ரசிகர்கள் தான் அதிகம் என்றே சொல்லலாம்.. அந்தவகையில் தனது இசையால் சினிமா ரசிகர்களை அசத்திய விஜய் என்ன நினைத்தாரோ தெரியவில்லை திடீரென நடிகராக அறிமுகமவிட்டார். மேலும் நடிப்பில் விஜய்க்கு ஆர்வம் அதிகமாம்.
5/8
Photo Credit: instagram
Share
கடந்த 2012 ஆம் ஆண்டு நான் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக விஜய் ஆண்டனி அறிமுகமானார். இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. யாரும் எதிர்பார்க்காத வகையில் இப்படம் வெளியாகி நம்ம விஜய் ஆண்டனியா இது என்று ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினர்.
6/8
Photo Credit: instagram
Share
இப்படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாகவும், இசையமைப்பாளராகவும் களம் இறங்கினர். சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன் என தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வந்த விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் திரைப்படம் மெகா ஹிட்டானது.
7/8
Photo Credit: instagram
Share
இசையால் ரசிகர்களை குஷிப்படுத்திய விஜய் ஆண்டனி தனது திரைப்படங்களிலும் தமிழ் ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறார். தற்போது தமிழ் சினிமாவில் பிஸி நடிகராக வலம் வரும் விஜய், கொலை, ரத்தினம், மழை பிடிக்காத மனிதன் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.
8/8
Photo Credit: instagram
Share
அந்தவகையில் சினிமாவில் பிஸியாக இருக்கும் விஜய் ஆண்டனியின் மனைவி மற்றும் குடும்ப புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. தற்போது விஜய் ஆண்டனியின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகிற்து.


Click it and Unblock the Notifications