பிக் பாஸ் தனலட்சுமிக்கு சைலண்டாக நடந்து முடிந்த திருமண நிச்சயதார்த்தம்.. மாப்பிள்ளை யாருன்னு பாத்தீங்களா? போட்டோஸ்!
பிக் பாஸ் பிரபலம் தனலட்சுமியின் திருமண நிச்சயதார்த்த போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
டிக் டாக் செயலி பல சாமானியர்களை பிரபலமாகியது. அதில் ஒருவர் தான் தனலட்சுமி. டிக் டாக் செயலியை தடை செய்த பின்னர் இன்ஸ்டாகிராம் பக்கத்தை சிறப்பாக பயன்படுத்திக்கொண்டார்.
இன்ஸ்டாகிராமில் விதவிதமான ரீல்ஸ் வீடியோக்களை பகிர்ந்து தனக்கென தனி ஃபாலோவர்ஸ் கூட்டத்தை உருவாக்கி வைத்திருந்த தனலட்சுமி, விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது.
கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 6வது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டார். பிக் பாஸ் மூலம் தனது தனித்துவ திறமைகளை வெளிக்காட்டி பட வாய்ப்புகளை ஈர்த்து பெரிய நடிகையாகிவிடலாம் என்ற ஆசையில் இருந்தார். ஆனால் பிக் பாஸ் வீட்டுக்குள் நடந்ததே வேறு.
பிக் பாஸ் வீட்டுக்குள் தனது பெயரை மோசமாக கெடுத்துக்கொண்டார். பிக் பாஸ் பார்வையாளர்கள், நெட்டிசன்கள் என பலரும் தனலட்சுமியை அதிகம் ட்ரோல் செய்யத் தொடங்கினர். இருப்பினும் 12 வாரங்கள் தாக்குப்பிடித்து பின்னர் எலிமினேட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய தனலட்சுமி தொடர்ந்து தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோக்களை பகிர்ந்து வந்தார். இந்த நிலையில் தற்போது இவர், தனது திருமண நிச்சயதார்த்த போட்டோஸ் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
வசந்த் என்பவருடன் தனலட்சுமிக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. தற்போது தனலட்சுமியின் திருமண நிச்சயதார்த்த போட்டோஸ் இணையவாசிகள் வாழ்த்துக்களுடன் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.



Click it and Unblock the Notifications