மதுரை முதல் திருநெல்வேலி வரை.. தமிழகத்தையே உலுக்கிய மெகா தங்க நகை கொள்ளை சம்பவங்கள்!
மதுரை நகைக்கடை கொள்ளை சம்பவம் தமிழகத்தையே உலுக்கி வரும் நிலையில் அதேபோல் தமிழ்நாட்டில் நிகழ்ந்த மெகா தங்க நகை கொள்ளை சம்பவங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
லலிதா நகைக்கடை கொள்ளை: 2019ம் ஆண்டு திருச்சியில் உள்ள லலிதா நகைக்கடையில் 13 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கநகை கொள்ளையடிக்கப்பட்டது. கடையின் பின்புறம் துளையிட்டு பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகையை கொள்ளையடித்துள்ளனர். அந்த கொள்ளை சம்பவத்தை நடத்தியது திருவாரூர் முருகன் மற்றும் குழுவினர் என போலீசார் கண்டறிந்து கைது செய்தனர்.
ஜாய் ஆலுக்காஸ் நகைக்கடை கொள்ளை: கடந்த 2021ம் ஆண்டு வேலூர் மாவட்டம் காட்பாடி சாலையில் அமைந்துள்ள ஜாய் ஆலுக்காஸ் நகைக்கடையில் 15.9 கிலோ தங்கநகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. 24 வயதே ஆன இளைஞர் ஒருவர் 10 நாட்களாக கடையை நோட்டமிட்டு சுவற்றில் துளையிட்டு 8 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்தார். பின்னர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அமர் நகைக்கடை கொள்ளை: 2012ம் ஆண்டு திருச்சி மாவட்டம் NSB ரோட்டில் அமைத்திருந்த அமர் நகைக்கடையில் மெகா நகைக்கொள்ளை சம்பவம் அரங்கேறியது. சுமார் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள 40 கிலோ தங்கநகை மற்றும் 3 லட்ச ரூபாய் ரொக்கத்தை மர்மங்கள் கொள்ளையடித்தனர். பின்னர் கொள்ளையர்கள் போலீசிடம் பிடிபட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
திருநெல்வேலி நகைக்கடை கொள்ளை: 2017ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள அழகர் நகைக்கடையில் சுமார் 60 கிலோ தங்கநகை கொள்ளையடிக்கப்பட்டது. தமிழகத்தையே இச்சம்பவம் உலுக்கியது. கடையின் cctv கேமராக்களை செயலிழக்கச் செய்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.
மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை: மதுரை பழங்காநத்தம்-காளவாசல் பைபாஸ் சாலையில் அமைத்துள்ள தனிஷ்க் நகைக்கடையில் 21 கோடி ரூபாய் மதிப்புள்ள 15 கிலோ தங்கநகை கொள்ளையடிக்கப்பட்டது. புதிதாக திறக்கப்பட்ட அந்த தங்கநகைக் கடையில் கொள்ளை சம்பவம் அரங்கேறியது. இந்த கொள்ளை சம்பவத்தில் இன்ஸ்டா பிரபலம் மீனாட்சி மற்றும் அவரின் ஆண் நண்பர் நிதிஷ் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.



Click it and Unblock the Notifications