Home / Photos
ஜெய்பீம் படத்தை புகழ்ந்துதள்ளிய முதல்வர் ஸ்டாலின்...! படக்குழுவினர் மற்றும் நடிகர் சூர்யாவை பாராட்டிய முதல்வர்...! இணையத்தில் செம வைரல்!
By Chandru
நடிகர் சூர்யா நடிப்பில் திரைக்கு வந்துள்ள ஜெய்பீம் திரைப்படத்தை முதலமைச்சர் ஸ்டாலின் பார்த்துவிட்டு கண் கலங்கி படக்குழுவினரை பாராட்டியுள்ளார்.
1/10
Share
நடிகர் சூர்யா நடிப்பில் திரைக்கு வந்துள்ள ஜெய்பீம் திரைப்படத்தை முதலமைச்சர் ஸ்டாலின் பார்த்துவிட்டு கண் கலங்கி படக்குழுவினரை பாராட்டியுள்ளார்.
2/10
Share
இருளர் இன மக்களின் வாழ்வியலையும், துன்ப துயரங்களையும் இதைவிட தெளிவாக காட்சிப்படுத்த முடியாது என ஜெய்பீம் படக்குழுவினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
3/10
Share
ஜெய்பீம் படக்குழுவினருக்கு வணக்கம் என தொடங்கும் கடிதத்தில் ஸ்டாலின் கூறியிருப்பதாவது; ''நேற்றைய தினம் ஜெய்பீம் திரைப்படம் பார்த்தேன். அதன் நினைவுகள் இரவு முழுவதும் மனதை கனமாக ஆக்கிவிட்டன என்றார்.
4/10
Share
விளிம்புநிலை இருளர் இன மக்களின் வாழ்வியலையும், அவர்கள் அனுபவித்து வரும் துன்ப துயரங்களையும் இதனைவிடத் துல்லியமாக, கலைப்பூர்வமாக காட்சிப்படுத்த இயலாது என்பதை காட்டிவிட்டீர்கள் என்றார்.
5/10
Share
மேலும் நடந்த ஒரு நிகழ்வை மையமாக வைத்து புனையப்பட்ட திரைக்கதையாக இருந்தாலும் அது பார்வையாளர் மனதில் ஏற்படுத்திய தாக்கம் என்பது மிக மிக கனமானதாக இருக்கிறது என்றார்.
6/10
Share
கதைக்களத்தை கலைக்களமாக மாற்றிச் சிறப்பாக இயக்கியுள்ள இயக்குநர் ஞனவேல் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
7/10
Share
மேலும் இது போன்ற சிறந்த படங்கள் ஏராளமாக வர வேண்டும் என்பதே எனது ஆசையும், விருப்பமும் ஆகும் என்றார் முதல்வர் ஸ்டாலின்.
8/10
Share
இருளர் இனம் குறித்து படம் எடுத்ததுடன் தனது கடமை முடிந்துவிட்டது எனக் கருதாமல் பழங்குடியினர் பாதுகாப்பு சங்க மேம்பாட்டுக்கு ஒரு கோடி ரூபாய் நிதியினை நண்பர் சூர்யா வழங்கியது என்னை நெகிழச்செய்தது என்ற முதல்வர் ஸ்டாலின்.
9/10
Share
மேலும் இது இருளர் வாழ்வில் ஒளியேற்றும் முயற்சியாகும்.இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜெய்பீம் திரைப்படம் குறித்தும் நடிகர் சூர்யா பற்றியும் புகழாரம் சூட்டியுள்ளார்.



Click it and Unblock the Notifications