மறைந்த விஎஸ் பாபு உடலை தோளில் சுமந்த முதல்வர் விஜய்.. கண்கலங்கிய தவெக-வினர்!
கொளத்தூர் எம்எல்ஏ விஎஸ் பாபுவின் உடலை தோளில் சுமந்து சென்று முதல்வர் விஜய் இறுதிமறியதை செலுத்தினார்.
கொளத்தூர் எம்எல்ஏ விஎஸ் பாபு நேற்று 19ம் தேதி மதியம் மாரடைப்பால் உயிரிழந்தார்.
கடந்த செப்டம்பர் 9ம் தேதி உடல்நிலைக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
72 நாட்கள் தொடர் தீவிர சிகிச்சையில் விஎஸ் பாபு இருந்து வந்தார். விஎஸ் பாபுவின் உடல் நலம் குறித்து மருத்துவமனை அறிக்கையும் வெளியிட்டது.
செப்டம்பர் 22ம் தேதிக்கு பின் மருத்துவமனை விஎஸ் பாபுவின் உடல் நலம் குறித்த அறிக்கை எதுவும் வெளியிடவில்லை. இதனால் அவரின் உடனலாம் குறித்த தகவல் வேண்டும் மருத்துவமனை அறிக்கை வெளியிடவேண்டும் என சென்னை உயிர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
மனு விசாரணைக்கு வரும் முன், நேற்று 19ம் தேதி விஎஸ் பாபு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை அறிவித்தது. விஎஸ் பாபுவின் மரணம் தவெக-வினர் இடையே சோகத்தையும் எதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. அரசியல் கட்சி தலைவர்கள் விஎஸ் பாபுவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.
இந்த நிலையில் விஎஸ் பாபுவின் இறுதி ஊர்வலத்தில் முதல்வர் விஜய் அவரின் உடலை தோளில் சுமந்து சென்று தனது இறுதிமரியாதையை செலுத்தினார்.



Click it and Unblock the Notifications