Home / Photos
மக்கள் பணிகளில் திமுக படுதோல்வி அடைந்துள்ளது..! தர்மபுரியில் ஹெச்.ராஜா பேச்சு!
By Chandru
தமிழகத்தில் கடந்த ஆறு மாத காலமாக நடந்து வரும் திமுக ஆட்சி, மக்கள் பணியைப் பொறுத்தவரை தோல்வி அடைந்துள்ளது என பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா தெரிவித்தார்.
1/12
Share
தமிழகத்தில் கடந்த ஆறு மாத காலமாக நடந்து வரும் திமுக ஆட்சி, மக்கள் பணியைப் பொறுத்தவரை தோல்வி அடைந்துள்ளது என பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா தெரிவித்தார்.
2/12
Share
தருமபுரியில் பாரதிய ஜனதா கட்சியினருக்கான பயிற்சிப் பட்டறை நிகழ்ச்சி இன்று தொடர்ந்து மூன்று நாட்கள் நடக்கிறது.
3/12
Share
இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேச, பாஜக கட்சியின் மூத்த தலைவர் ஹெச். ராஜா தருமபுரி வந்தார்.
4/12
Share
மேலும் நிகழ்ச்சிக்கு இடையே பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது.''சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 25 நாட்களாகத் தொடர் மழை காரணமாக பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
5/12
Share
கடந்த ஆட்சியில் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒரு ஏக்கருக்கு ரூ.30,000 நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். ஆனால், தற்போது ஆட்சியில் உள்ளபோது ஒரு ஹெக்டேருக்கே ரூ.20,000 அறிவித்துள்ளார் என்றார்.
6/12
Share
தமிழகத்தில் நீதிமன்றம் உள்ளிட்ட அரசுக் கட்டிடங்களே நீர்வழிப் பாதைகள், நீர்நிலைகளை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளன என்றார்.
7/12
Share
அரசியல், பொதுவாழ்வு, தனிமனித நெறிமுறைகள் உள்ளிட்ட அனைத்திலுமே ஒழுக்கம் தேவை. கடந்த 54 ஆண்டுகளாக திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழகத்தில் 10 ஆயிரத்து 800 நீர்நிலைகள் மாயமாகி உள்ளன என்றார்.
8/12
Share
தமிழகத்தில் நீர்நிலைகள் பாதுகாப்பு குறித்த ஒழுக்க நெறிமுறைகளை வகுக்க வேண்டும். திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்கு முடிவு கட்டாமல் இவ்வாறு நெறிமுறைகளை வகுக்க முடியாது என்றார்.
9/12
Share
தமிழகத்தில் கடந்த ஆறு மாத கால திமுக ஆட்சி, மக்கள் பணியைப் பொரறுத்தவரை தோல்வி அடைந்துள்ளது என்றார்.



Click it and Unblock the Notifications