'தங்க மீன்கள்' செல்லம்மாவை நியாபகம் இருக்கா? இப்போ எப்படி இருக்கார் தெரியுமா? திருமணமும் முடிஞ்சிடுச்சாம்?
'தங்க மீன்கள்' பட செல்லம்மாவின் திருமண போட்டோஸ் இணையவாசிகளை ஆச்சரியப்படுத்தி வைரலாகி வருகிறது.
ராம் இயக்கி, நடித்த திரைப்படம் 'தங்க மீன்கள்'. அப்படத்தில் ராம்மின் மகளாக செல்லம்மா கதாபாத்திரத்தில் நடிகை சாதனா நடித்திருந்தார்.
'தங்க மீன்கள்' திரைப்படம் சாதனாவுக்கு பெரிய பெயரை பெற்று தந்தது. மக்கள் மனதில் இடம் பிடித்து பிரபல குழந்தை நட்சத்திரமாக வலம் வந்தார்.
அப்பா மகள் செண்டிமெண்ட் பேசி வெற்றி பெற்ற அப்படத்தை தொடர்ந்து மீண்டும் இயக்குநர் ராம் இயக்கிய 'பேரன்பு' படத்தில் மம்மூட்டிக்கு மகளாக நடித்திருந்தார்.
அப்பா-மகள் செண்டிமெண்ட் பேசிய தங்க மீன்கள், பேரன்பு என வெறும் இரண்டே இரண்டு படங்களில் நடித்து தேசிய விருதும் பெற்றார்.
அதன்பின்னர் வேறு எந்த படங்களிலும் நடிக்காமல் படிப்பு மற்றும் பரதநாட்டிய நடனம் என வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது.
பரதநாட்டியத்தில் அதிக ஆர்வம் கொண்ட இவர், வெவ்வேறு மேடைகளில் நடனம் ஆடி பல விருதுகளையும் வென்றுள்ளார். சிறந்து பரதநாட்டிய கலைஞராக உள்ளார்.
இந்த நிலையில் சாதனாவின் திருமணம் போட்டோஸ் வெளியாகி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. 'தங்க மீன்கள்' செல்லம்மாவுக்கு கல்யாணம் முடிஞ்சிடுச்சா? என இணையவாசிகள் ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.
சாதனாவின் திருமணத்தில் இயக்குநர் ராம் கலந்துகொண்டு வாழ்த்தியுள்ளார்.
ஷஷாங்க் என்பவரை கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் செய்துகொண்டார். தற்போது சாதனாவின் திருமண போட்டோஸ் இணையவாசிகளை ஆச்சரியப்படுத்தியுள்ளது.



Click it and Unblock the Notifications