Home / Photos
எதிர்நீச்சல் சீரியல் நடிகைக்கு எவ்வளவு பெரியா பையனா? ரசிகர்களை வியக்க வைக்கும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
By Chandru
எதிர்நீச்சல் சீரியல் நடிகையின் சமீபத்திய போட்டோஸ் இணையவாசிகளை ஆச்சரியப்படுத்தி சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/6
Photo Credit: instagram@kaniha
Share
பைவ்ஸ்டார் என்ற படத்தின் மூலம் நாயகியாக தனது திரை பயணத்தை தொடங்கியவர் நடிகை கனிகா. பின்னர் சேரனின் 'ஆட்டோகிராப்' படத்தில் முக்கிய ரோலில் நடித்து மக்கள் கவனம் ஈர்த்தார்.
2/6
Photo Credit: instagram@kaniha
Share
தமிழில் வெவ்வேறு படங்களில் நடித்து வந்த கனிகா, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகைகளில் ஒருவராக வலம் வந்தார்.
3/6
Photo Credit: instagram@kaniha
Share
சினிமாவில் பிஸியாக இருந்த கனிகா, திருமண வாழ்க்கைக்குள் என்ட்ரி கொடுத்தார். குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆன கனிகாவுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. கணவர், குழந்தையுடன் நேரத்தை செலவழிக்க சினிமாவுக்கு கொஞ்சம் ரெஸ்ட் கொடுத்தார்.
4/6
Photo Credit: instagram@kaniha
Share
சில வருடங்கள் சினிமாவில் இருந்து விலகி இருந்த கனிகா, மீண்டும் நடிக்கத் தொடங்கினார். வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் கவனம் செலுத்தி வருகிறார். சன் டிவியில் ஒளிபரப்பான 'எதிர்நீச்சல்' சீரியலில் முக்கிய ரோலில் நடித்து மீண்டும் பழைய ஃபார்முக்கு வந்துள்ளார்.
5/6
Photo Credit: instagram@kaniha
Share
சின்னத்திரையில் பிஸியாக இருக்கும் கனிகா, வெள்ளித்திரையில் சில படங்களில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். தமிழில் இவர், இறுதியாக நடித்த திரைப்படம் மாதவனின் 'G.D.N'. அதன்பின்னர் வேறு எந்த படங்களிலும் கமிட்டாகாமல் சீரியலில் மட்டும் நடித்து வருகிறார்.
6/6
Photo Credit: instagram@kaniha
Share
இந்த நிலையில் தற்போது இவர், தனது மகனின் 17வது பிறந்தநாளை கலக்கலாக கொண்டாடியுள்ளார். தனது மகனுடன் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து இணையவாசிகளை ஆச்சரியப்படுத்தியுள்ளார். சீரியல் நடிகை கனிகாவுக்கு இவ்வளவு பெரிய பையனா? அந்த பயனுக்கு அம்மான்னு சொன்ன யாரும் நம்பமாட்டாங்க? என லைக் மற்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.



Click it and Unblock the Notifications