பக்தி மயத்தில் 'ஃபயர்' பட நடிகை.. பட்டுப்புடவையில் கலக்கல் போஸ்!
பக்தி மயத்தில் இருக்கும் ரச்சித்தா மகாலட்சுமியின் சமீபத்திய போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வெளியாகியுள்ளது.
அழகாலும், நடிப்பாலும் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. சின்னத்திரையில் தனது திரை பயணத்தை தொடங்கினார்.
சரவணன் மீனாட்சி 2 சீரியல் இவரை மிகவும் பிரபலமாகியது. அதற்கு முன் பல சீரியல்களில் நடித்திருந்தார் இருப்பினும் விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி சீரியல் தான் இவருக்கென தனி ஃபேன்ஸ் கூட்டத்தை உருவாக்கி கொடுத்தது.
சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வந்த ரச்சிதாவுக்கு தெலுங்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பின்னர் தமிழில் உப்புக்கருவாடு என்ற படத்தில் நாயகியாக நடித்தார். மக்கள் மனதில் தனி இடத்தை உருவாக்கி வைத்திருந்தாலும் பெரியளவில் பட வாய்ப்பு ஒன்றும் கிடைக்கவில்லை.
அதிகப்படியான பட வாய்ப்புகளை ஈர்க்கவேண்டி விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். எதிர்பார்த்ததை போல் பிக் பாஸ் இவரை மிகவும் பிரபலமாகியது. எதை எதிர்பார்த்து உள்ளே சென்றாரோ அது நடந்தது. அதுதாங்க பட வாய்ப்பு. தமிழ், தெலுங்கு, கன்னடம் என பிஸியாக இருக்கத் தொடங்கினார்.
தற்போது இரண்டு படங்களில் கமிட்டாகி நடித்து வரும் ரச்சிதா, தெலுங்கானாவில் உள்ள சொர்ணகிரி கோயிலில் சாமி தரிசனம் செய்த பக்தி மயமான போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். ஹோம்லி லுக்கில் இருக்கும் ரச்சிதாவின் போட்டோஸ் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.



Click it and Unblock the Notifications