Home / Photos
'மருமகள்' சீரியல் நாயகியை பாத்தீங்களா? இன்ஸ்டாவை கலக்கும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
By Chandru
சீரியல் நடிகை கேப்ரியல்லா சார்ல்டனின் சமீபத்திய போட்டோஸ் ரசிகர்களை ஈர்த்து வருகிறது.
1/7
Photo Credit: instagram@gabriella charlton
Share
குழந்தை நட்சத்திரமாக தனது திரை பயணத்தை தொடங்கியவர் நடிகை கேப்ரியல்லா சார்ல்டன். அப்பா படத்தின் மூலம் மக்கள் கவனத்தை அதிகம் ஈர்த்தார். அதன்பின்னர் எந்த படங்களிலும் நடிக்கவில்லை.
2/7
Photo Credit: instagram@gabriella charlton
Share
பட வாய்ப்புக்காக விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார். 5 லட்ச ரூபாய் பணத்துடன் வெளியேறிய கேப்ரியல்லா, மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இவருக்கென தனி ஃபேன்ஸ் கூட்டமும் உருவாகினர்.
3/7
Photo Credit: instagram@gabriella charlton
Share
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பட வாய்ப்புகள் தேடி வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சீரியல் வாய்ப்புகள் மட்டுமே கிடைத்தது. ராஜா ராணி 2, ஈரமான ரோஜாவே 2 ஆகிய சீரியல்களில் நாயகியாக நடித்து வந்தார்.
4/7
Photo Credit: instagram@gabriella charlton
Share
நாயகியாக கேப்ரியல்லா நடித்த இரண்டு சீரியல்களிலும் ஹிட், அதனை தொடர்ந்து தற்போது 'மருமகள்' சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார்.
5/7
Photo Credit: instagram@gabriella charlton
Share
சின்னத்திரையில் பிரபல சீரியல் நடிகைகளில் ஒருவராக வலம் வரும் இவர், சோசியல் மீடியாக்களிலும் செம ஆக்ட்டிவாக போட்டோக்களை பதிவிட்டு வருகிறார்.
6/7
Photo Credit: instagram@gabriella charlton
Share
சீரியலில் நாயகியாக இருந்தாலும் வெள்ளித்திரையில் நாயகியாக வலம் வர முயற்சித்து வருகிறார். அதன்படி விதவிதமான கலக்கல் போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து தனக்கென மவுசை உருவாக்கி வருகிறார்.
7/7
Photo Credit: instagram@gabriella charlton
Share
அந்த வகையில் தற்போது இவர், பிங்க் நிற உடையில் கலக்கலாக போஸ் கொடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்த்து ரசிகர்கள் கூட்டத்தை ஏங்கவைத்து வருகிறார்.



Click it and Unblock the Notifications