Home / Photos
பத பதைக்கும் காட்சிகள்.. டிஸ்னி பிளஸ் தளத்தில் பார்க்க வேண்டிய சைக்கோ த்ரில்லர் படங்கள்!
By Divya Bala
சாதாரண படங்களை காட்டிலும் திரில்லர் படங்களுக்கு ரசிகர்கள் அதிகமாக இருக்க காரணம், இந்த படங்கள் விறு விறுப்பாக செல்வதுடன் அடுத்து என்ன என்று நம்மை யோசிக்க வைக்கும். அப்படி பட்ட படங்கள் இந்த லிஸ்டில் உள்ளது.
1/7
Photo Credit: IMDb
Share
கிளாக்: 2023ல் வெளியான இந்த படம் குழந்தை பெற்றுக்கொள்ள சுற்றி இருக்கும் அனைவரும் வற்புறுத்த ஒரு பரிசோதனையில் சிக்கும் பெண்ணின் கதையை த்ரில்லிங் கலந்து எடுக்கப்பட்டது ஆகும்.
2/7
Photo Credit: IMDb
Share
கிளாஸ்: 2019ல் வெளியான இந்த படம் ஹாரர் கலந்த திரில்லர் ஆகும். தனது சூப்பர் பவரை வைத்து அதிகாரி ஒருவர் மன நோயாளியை கண்டுபிடிக்க அவர் எடுக்கும் முயற்சிகளை வித்தியாசமாக காண்பித்துள்ளார்கள்.
3/7
Photo Credit: IMDb
Share
சைன்ஸ்: மனைவியை இழந்த ஒருவர் தன குழந்தைகளுடன் விவசாயம் செய்ய அந்த நிலத்தில் வினோதமான வட்ட வடிவில் எதையோ பார்க்க அதன் பிறகும் நடக்கும் மர்மங்கள் என மிஸ் பண்ணக்கூடாத சூப்பர் த்ரில்லர் படம் இதுவாகும்.
4/7
Photo Credit: IMDb
Share
ஃப்ரெடி: 2022ல் வெளியான இந்த படம் காதலுக்கும் சைக்கோ தனத்திற்கும் இடையில் மாட்டிக்கொள்ளும் ஒரு பல் மருத்துவரின் வாழ்க்கையை விறு விறுப்புடன் சொல்லியிருக்கிறார்கள்.
5/7
Photo Credit: IMDb
Share
மெமெரிஸ்: பிரித்விராஜ் நடிப்பில் வெளியான சைக்கோ த்ரில்லர் படமான இது ஒரு குடிகார முன்னாள் போலீஸ் அதிகாரி ஒரு சைக்கோ கொலைகாரனை கண்டுபிடிக்க உதவ ஒவ்வொரு மர்மமாக உடையும். இந்த படத்தை கண்டிப்பாக பார்க்கலாம்.
6/7
Photo Credit: IMDb
Share
பிரெஷ்: இளம்பெண் ஒருவர் இளைஞன் ஒருவனை சந்திக்க அவருடன் வெளியில் செல்கிறாள். அந்த இரவு அவள் சந்திக்கும் மர்மங்கள் பின்னர் அதில் இருந்து தப்பித்தாளா என்பதை த்ரில்லிங்காக எடுத்துள்ளார்கள்.
7/7
Photo Credit: IMDb
Share
றோர்ஸ்சாச்: மம்மூட்டி நடிப்பில் வெளியான இந்த படம் ஒரு பழி வாங்கும் கதை ஆகும். வெளிநாட்டில் இருந்து பழிவாங்குவதற்காகவே இந்தியா வரும் மம்முட்டி ஒரு பேயை பழி வாங்குகிறார்.



Click it and Unblock the Notifications