Home / Photos
அனிருத் ரிசப்ஷனில் அனைவரின் கவனம் ஈர்த்த முத்தையா முரளிதரன் மனைவி.. சென்னை பொண்ணா? போட்டோஸ் பாத்தீங்களா?
By Chandru
அனிருத் - காவ்யா மாறன் ரிசப்ஷனில் கெஸ்டாக கலந்துகொண்ட முத்தையா முரளிதரனின் மனைவி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். யார் அவர்? வாங்க போட்டோவுடன் பார்ப்போம்.
1/8
Share
அனிருத் - காவ்யா மாறன் ரிசப்ஷனில் கலந்துகொண்ட முத்தையா முரளிதரன் மனைவியை பார்த்து பலரும் வியந்துபோயினர். நம்ம ஊர் பொண்ணா இது? என அசந்துபோயினர். வாங்க அவங்களை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
2/8
Photo Credit: instagram@Madhi Malar
Share
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன். உலகளவில் இவருக்கென தனி ஃபேன்ஸ் கூட்டம் உள்ளனர். அவரின் பவுலிங் ஸ்டைலோ தனி தான். அசத்தலான சுழற்பந்து மூலம் பேட்ஸ் மேன்களை திணறடித்துவிடுவார். 2011ல் இலங்கை கிரிக்கெட் அணியில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார்.
3/8
Photo Credit: instagram@Madhi Malar
Share
இலங்கையை சேர்ந்த முத்தையா முரளிதரன், கடந்த 2005ம் ஆண்டு மார்ச் மாதம் மதி மலர் என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் திருமணம் நடக்க காரணமாக நடிகர் வாகை சந்திரசேகர் இருந்ததாக கூறப்படுகிறது.
4/8
Photo Credit: instagram@Madhi Malar
Share
முத்தையா முரளிதரன் - மதி மலர் ஜோடிக்கு நரேன் என்கிற மகனும், க்ரிஷா என்கிற மகளும் உள்ளனர். இந்த நிலையில் சமீபத்தில் சென்னையில் பிரமாண்டமாக நடந்த முடிந்த அனிருத்-காவ்யா மாறன் திருமண வரவேற்பு விழாவில் முத்தையா முரளிதரன் தனது மனைவி மதி மலருடன் கலந்துகொண்டார்.
5/8
Photo Credit: instagram@Madhi Malar
Share
மதி மலரை பார்த்த பலரும் வியந்துபோயினர். முத்தையா முரளிதரன் மனைவியா இவங்க? என பலரும் ஆச்சரியப்பட்டனர். ஒருவேளை அவர் இலங்கை நடிகையா இருப்பாங்களோ? மாடல் அழகியா? என பேசத்தொடங்கினார்.
6/8
Photo Credit: instagram@Madhi Malar
Share
சென்னையில் இருக்கும் பிரபல மருத்துவமனையை நடத்தி வரும் குடும்பத்தை சேர்ந்தவர் தான் மதி மலர். சென்னை பொண்ணு தான் மதி. முத்தையா முரளிதரனை காதல் திருமணம் செய்துகொண்டு இலங்கையில் செட்டிலாகிவிட்டார். இந்த நிலையில் மதியின் இன்ஸ்டா பக்கம் பலரின் கவனம் ஈர்த்துள்ளது.
7/8
Photo Credit: instagram@Madhi Malar
Share
இன்ஸ்டாவில் ஜிம் ஒர்கவுட் வீடியோ, யோகா வீடியோக்களை பகிர்த்து இணையவாசிகளை ஆச்சரியப்படுத்தியுள்ளார். மாடல் அழகிகளுக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு செம ஃபிட்டாக உள்ளார். இரண்டு குழந்தைகளுக்கு தாய் என்று சொன்னால் யாரும் நம்பமாட்டாங்க! அவ்வளவு ஃபிட்டாக மதி மலர் உள்ளார்.
8/8
Photo Credit: instagram@Madhi Malar
Share
இணையத்தளத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ள முத்தையா முரளிதரன் மனைவி மதி மலரின் போட்டோஸ் இணையவாசிகள் கவனம் ஈர்த்து சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.



Click it and Unblock the Notifications