Home / Photos
அசத்தலான க்ரைம் திரில்லர் படங்களை தேடுறீங்களா? இந்த வீட் எண்டில் ஓடிடி-யில் பார்க்கவேண்டிய டாப் 5 லிஸ்ட் இதோ!
By Chandru
வாரம் முழுக்க மாங்கு மாங்குன்னு வேலை செய்து களைத்து போனவர்கள் மைண்டை ரிலாக்ஸ் செய்ய குடும்பத்துடனும், நண்பர்களுடனும் அவுட்டிங் செல்வது வழக்கம். இதில் சிலர் 2 நாள் லீவை வெளியில் அலைந்து மீண்டும் டையார்ட் ஆவதற்கு பதில் பேசாம வீட்டிலேயே இருந்து ரெஸ்ட் எடுக்கலாம் என்று நினைப்பவர்களும் உண்டு. வீட்டிலேயே சும்மா எப்படி இருக்குறது எதாவது ஒரு படத்தை பார்க்கலாம் என்று நினைப்பவர்களுக்கு என்ன படம் பார்க்கவேண்டும் என்பதில் குழப்பம் இருக்கும். காமெடி, ஹாரர், ஆக்ஷன், க்ரைம் இப்படி பல ரகங்கள் உள்ளன. இதில் க்ரைம் கலந்த திரில்லர் திரைப்படங்களை பார்க்க செம விறுவிறுப்பாக இருக்கும். அந்த வகையில் இந்த வீக் எண்டில் ஹாய்யாக சோபாவில் அமர்ந்தபடி ஓடிடியில் பார்க்கவேண்டிய க்ரைம் திரில்லர் திரைப்படங்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
1/5
Share
இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் கடந்த 2017ம் ஆண்டு வெளியான கிரைம் திரில்லர் திரைப்படம் குற்றம் 23. அருண் விஜய், மகிமா நம்பியார், தம்பி ராமையா உள்ளிட்டோர் நடிப்பில் இப்படம் வெளியானது. செயற்கை கருத்தரிப்பில் நடைபெறும் குற்றங்களை இப்படம் காட்டுகிறது. இப்படத்தை அமேசான் ப்ரைம் ஓடிடியில் பார்க்கலாம்.
2/5
Share
2015ல் இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, நயன்தாரா, தம்பி ராமையா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் தனி ஒருவன். சூப்பர் ஸ்மார்ட் வில்லனை தனி ஒருவனை ஹீரோ எப்படி எதிர்கொள்கிறான் என்பதே இப்படத்தின் கதைக்களம் ஆகும். இப்படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடியில் பார்க்கலாம்.
3/5
Share
2017ம் ஆண்டு இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் வெளியான திரில்லர் திரைப்படம் குரங்கு பொம்மை. விதார்த், பாரதிராஜா, டெலினா டேவிட் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இப்படம் இளைஞர்களை அதிகம் ஈர்த்தது. பணத்தின் மீதான பேராசையே இப்படத்தின் கதைக்களம். இப்படத்தை அமேசான் ப்ரைம் ஓடிடியில் பார்க்கலாம்.
4/5
Share
இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் கடந்த 2010ல் வெளியான க்ரைம் திரில்லர் திரைப்படம் ஆரண்ய காண்டம். இப்படம் சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதை பெற்றது. இப்படத்தை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்கலாம்.
5/5
Share
கார்த்திக் நரேன் இயக்கத்தில் வெளியான க்ரைம் த்ரில்லிங் திரைப்படம் துருவங்கள் பதினாறு. அசத்தலான இந்த த்ரில்லிங் படத்தை அமேசான் ப்ரைம் ஓடிடியில் பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications