Home / Photos
மதுரையில் உள்ள அம்மா உணவகத்தின் பெயர் பலகையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் புகைப்படம்...! மதுரையில் பரபரப்பு!
By Chandru
மதுரையில் அம்மா உணவக பெயர் பலகையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா படத்துடன் சேர்த்து கலைஞரின் படமும் இடம்பெற்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1/7
Share
மதுரையில் அம்மா உணவக பெயர் பலகையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா படத்துடன் சேர்த்து கலைஞரின் படமும் இடம்பெற்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2/7
Share
திமுக ஆட்சி அமைந்த பிறகு சென்னையில் சிலர் அம்மா உணவகம் தாக்கப்பட்டு சர்ச்சையான பின்னர், முதல்வர் ஸ்டாலின் அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும் என தெரிவித்திருந்தார்.
3/7
Share
மேலும் தமிழகத்தில் தொடர்ந்த மழை வெள்ள பாதிப்புகளின் போது அம்மா உணவகத்தில் இலவசமாக உணவுகளை வழங்கவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
4/7
Share
இந்நிலையில் மதுரை மாநகராட்சியில் மொத்தம் 12 இடங்களில் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.
5/7
Share
இதில் மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் செயல்பட்டு வரும் உணவகத்தில் ஏற்கனவே பணியாற்றிய ஊழியர்களை திடீர் பணி நீக்கம் செய்து விட்டு திமுக பிரமுகர்களுக்கு நெருங்கிய நபர்களை பணியமர்த்தி உள்ளதாக புகார்களும் எழுந்தன.
6/7
Share
மேலும் இந்த உணவகத்தில் வெளியே வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்தோடு திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதி படமும் பொறிக்கப்பட்டுள்ளது.
7/7
Share
இந்நிலையில் கலைஞர் கருணாநிதியின் புகைப்படம் அம்மா உணவகம் பெயர் பலகையில் இருந்தது மதுரையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.



Click it and Unblock the Notifications