Home / Photos
ஜனாதிபதி,பிரதமருடன் நடிகர் ரஜினிகாந்த்...! இணையத்தை கலக்கும் வைரல் புகைப்படம்!
By Chandru
சூப்பர்ஸ்டார் ரஜினி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாக வலம் வருகிறது.
1/11
Share
சூப்பர்ஸ்டார் ரஜினி ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாக வலம் வருகிறது.
2/11
Share
டெல்லியில் விஞ்ஞான் பவனில் 67வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெற்ற போது நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது.
3/11
Share
மேலும் இந்த விழாவில் தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த தனுஷ்,பார்த்திபன்,மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் விருதுகளைப் பெற்றனர்.
4/11
Share
இந்நிலையில் திரைப்படத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்ததற்காக நடிகர் ரஜினிகாந்துக்கு 'தாதா சாகேப் பால்கே' விருது வழங்கப்பட்டது.
5/11
Share
இதற்கு முன்பு தமிழில் எல்.வி. பிரசாத், நடிகர் சிவாஜி கணேசன், இயக்குநர் கே. பாலச்சந்தர் ஆகியோருக்கு வழங்கப்பட்ட நிலையில், இம்முறை ரஜினிகாந்துக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
6/11
Share
திரைத்துறையின் உயரிய விருதான 'தாதா சாகேப் பால்கே' விருதைப் பெற்ற நடிகர் ரஜினிகாந்துக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் சமூக வலைத்தளத்தில் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
7/11
Share
மேலும் அதேபோல் பல்வேறு பிரபலங்களும் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
8/11
Share
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த், டெல்லியில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை தனது குடும்பத்தினருடன் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
9/11
Share
இதுகுறித்து ரஜினிகாந்த் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், "மதிப்பிற்குரிய ஜனாதிபதி, பிரதமரைச் சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றதில் பெரும் மகிழ்ச்சி" என்று குறிப்பிட்டுள்ளார்.



Click it and Unblock the Notifications