Home / Photos
சேலையில் சொக்கவைக்கும் ரம்யா பாண்டியன்.. லேட்டஸ்ட் போட்டோஷூட் கிளிக்ஸ்!
By Chandru
நடிகை ரம்யா பாண்டியன், சேலையில் ஸ்டைலாக போஸ் கொடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
1/6
Photo Credit: instagram@ramya pandian
Share
தமிழ் சினிமாவின் முக்கிய நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரம்யா பாண்டியன். டம்மி பட்டாசு படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர், ஜோக்கர் படத்தின் மூலம் மக்களின் பாராட்டுகளை பெற்றார். இவரின் பட வாய்ப்புக்கு விதை போட்டது மொட்டைமாடி போட்டோஷூட் என்பது குறிப்பிடத்தக்கது.
2/6
Photo Credit: instagram@ramya pandian
Share
வெள்ளித்திரையில் வலம் வந்த ரம்யாவை சின்னத்திரை மிகவும் பிரபலமாகியது. குறிப்பாக குக் வித் கோமாளி, பிக் பாஸ் ஆகிய நிகழ்ச்சிகள் இவரை பட்டிதொட்டி எங்கும் இவர் பெயரை சொல்ல வைத்தது. பட வாய்ப்புகளும் தேடி வர தொடங்கின.
3/6
Photo Credit: instagram@ramya pandian
Share
ஒரு கட்டத்தில் ரம்யாவுக்கு தமிழில் போதிய படங்களில் கிடைக்காததால் மலையாள சினிமாவிலும் அறிமுகமாகினார். முதல் படமே மம்மூட்டியுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து எங்கும் சரியான ரீச் கிடைக்காததால் திருமண வாழ்க்கைகளுள் ஐக்கியமாகிவிட்டார்.
4/6
Photo Credit: instagram@ramya pandian
Share
திருமணத்துக்கு பின்னர் கணவருடன் அதிக நேரத்தை செலவு செய்து வந்த ரம்யா, மீண்டும் போட்டோஷூட் களமிறங்கினார். ரசிகர்களின் எண்ணிக்கையை தக்கவைக்கவும், பட வாய்ப்புகளை ஈர்க்கவும் தொடர்ந்து போட்டோஷூட் நடத்தி வருகிறார்.
5/6
Photo Credit: instagram@ramya pandian
Share
சில வாரங்களுக்கு முன் ரம்யா, டைட்டான மாடர்ன் உடையில் போட்டோஷூட் நடத்திய புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். திருமணத்திற்கு பின் ட்ரடிஷனல் லுக்கில் போட்டோஷூட் நடத்தி வந்த இவர், திடீரென கிளாமர் ரூட்டுக்கு மாறியது ரசிகர்களை குஷிப்படுத்தியது.
6/6
Photo Credit: instagram@ramya pandian
Share
தாவணியில் சின்ன பெண்ணாக மாறிய ரம்யாவின் சமீபத்திய போட்டோஷூட் அதிக லைக்குகளை அள்ளியது. அதேபோல் தற்போது இவர் பகிர்ந்துள்ள போட்டோஸ் இணையவாசிகளை ஈர்த்துள்ளது. சேலையில் வித்தியாசமாக டிசைன் செய்யப்பட்ட ஜாக்கெட்டில் விதவிதமாய் போட்டோஷூட் நடத்திய புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். தற்போது இவரின் இந்த லேட்டஸ்ட் போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் ட்ரெண்டாகி வருகிறது.



Click it and Unblock the Notifications