Home / Photos
'நாதஸ்வரம்' கோபியின் மனைவி மலரை நியாபகம் இருக்கா? இப்போ எப்படி இருக்காங்கனு பாருங்க? போட்டோஸ்!
By Chandru
நாதஸ்வரம் சீரியல் நடிகையின் சமீபத்திய புகைப்படங்கள் இணையவாசிகளை ஆச்சரியப்படுத்தி சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/6
Photo Credit: filmibeat
Share
2008ல் சன் டிவியில் ஒளிபரப்பான 'கலசம்' என்ற தொடரில் முக்கிய ரோலில் நடித்து தனது சின்னத்திரை பயணத்தை தொடங்கியவர் நடிகை ஸ்ரீதிகா. அதனை தொடர்ந்து கலைஞர் டிவியில் ஒளிபரப்பான 'கோகுலத்தில் சீதை' என்ற தொடரிலும் நடித்து வந்தார்.
2/6
Photo Credit: filmibeat
Share
அதனை தொடர்ந்து 2010ல் சன் டிவியில் ஒளிபரப்பான 'நாதஸ்வரம்' சீரியலில் கோபியின் மனைவியாக மலர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானார். மலர் கதாபாத்திரம் இவரை மிகவும் பிரபலமாகியது. அதன் மூலம் பிரபல சின்னத்திரை நடிகையாக வலம் வர தொடங்கினார்.
3/6
Photo Credit: instagram@Srithika
Share
மாமியார் தேவை, உயிர்மை, சன் டிவியின் குலதெய்வம், கல்யாண பரிசு 2, அழகு, மகராசி, சுந்தரி என பல சீரியல்கள் முன்னை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். சின்னத்திரையில் மட்டுமல்லாமல் சில படங்களிலும் நடித்துள்ளார்.
4/6
Photo Credit: instagram@Srithika
Share
வெண்ணிலா கபடி குழு, மதுரை டூ தேனி வாழி ஆண்டிபட்டி, தனுஷின் வேங்கை உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். சின்னத்திரை, வெள்ளித்திரை என செம பிஸியாக இருந்த ஸ்ரீதிகா, தனது 33வது வயதில் சனீஷ் என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார்.
5/6
Photo Credit: instagram@Srithika
Share
ஸ்ரீதிகா-சனீஷ் ஜோடி சில ஆண்டுகள் மட்டுமே சேர்ந்து இருந்த நிலையில் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டனர். பின்னர் தன்னுடன் நடிக்கும் சீரியல் நடிகர் எஸ்.எஸ்.ஆர். ஆர்யன் என்பவரை இரண்டாவதாக காதல் திருமணம் செய்துகொண்டார். தற்போது இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. தற்போது தெலுங்கு சின்னத்திரையிலும் என்ட்ரி கொடுத்து கலக்கி வருகிறார்.
6/6
Photo Credit: instagram@Srithika
Share
இந்த நிலையில் ஸ்ரீதிகாவின் சமீபத்திய போட்டோஸ் இணையவாசிகளை ஆச்சரியப்படுத்தியுள்ளது. 'நாதஸ்வரம்' கோபியின் மனைவி மலரா இவங்க? என ஸ்ரீதிகாவின் குடும்ப புகைப்படத்தை பார்த்து ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர். தற்போது ஸ்ரீதிகாவின் சமீபத்திய போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.



Click it and Unblock the Notifications