Home / Photos
36 வயதாகும் 'நந்தினி' சீரியல் நாயகியை நியாபகம் இருக்கா? இப்போ எப்படி இருக்கார் பாத்தீங்களா? கிளிக்ஸ்!
By Chandru
நந்தினி சீரியல் நடிகையின் சமீபத்திய புகைப்படங்கள் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/8
Photo Credit: instagram@nithya ram
Share
கன்னட சின்னத்திரை மூலம் தனது திரை பயணத்தை தொடங்கியவர் நடிகை நித்யா ராம். அதன்பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான 'அவள்' என்ற தொடரில் நடித்து தமிழ் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார்.
2/8
Photo Credit: instagram@nithya ram
Share
தொடர்ந்து கன்னடம் மற்றும் தெலுங்கு சின்னத்திரையில் வெவ்வேறு சீரியல்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தார். பின்னர் மீண்டும் தமிழ் சின்னத்திரைக்குள் என்ட்ரி கொடுத்தார்.
3/8
Photo Credit: filmibeat
Share
இயக்குநர் சுந்தர் சி தயாரிப்பில் சன் டிவியில் ஒளிபரப்பான நந்தினி சீரியலில் நந்தினி மற்றும் கங்கா என இரட்டை ரோலில் நடித்து இல்லத்தரசிகளின் கவனம் ஈர்த்தார். அனைவரின் கவனம் ஈர்த்த இவர், பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானார். இவருக்கென தனி ஃபேன்ஸ் கூட்டமும் உருவானது.
4/8
Photo Credit: instagram@nithya ram
Share
நந்தினி சீரியல் மெகா வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்தடுத்து தமிழ் சீரியலில் வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 'சவாலே சமாளி' உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் போட்டியாளராகவும், சில நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகவும் வலம் வந்தார்.
5/8
Photo Credit: instagram@nithya ram
Share
தமிழ் சின்னத்திரையில் தலையைக்காட்டத்த நித்யா, கன்னடம் சின்னத்திரையில் செம ஆக்ட்டிவாக நடித்து வருகிறார். தற்போது ஹிந்தி சீரியல்களிலும் என்ட்ரி கொடுத்துள்ளார்.
6/8
Photo Credit: instagram@nithya ram
Share
சின்னத்திரையில் முன்னணி நடிகையாக வலம் வரும் நித்யா ராம், கடந்த 2019ம் ஆண்டு கௌதம் நாராயணசுவாமி என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின்னரும் சீரியல்களில் செம பிஸியாக நடித்து வருகிறார்.
7/8
Photo Credit: instagram@nithya ram
Share
தற்போது 36 வயதாகும் நித்யா ராமின் சமீபத்திய போட்டோஸ் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. நந்தினி சீரியல் நாயகியா இவங்க? இன்றும் செம லுக்கா இருக்காங்களா? என நித்யாவின் இன்ஸ்டா போட்டோக்களுக்கு லைக் மற்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
8/8
Photo Credit: instagram@nithya ram
Share
தற்போது நந்தினி சீரியல் புகழ் நித்யா ராமின் சமீபத்திய போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வெளியாகி இணையவாசிகள் கவனம் ஈர்த்து வைரலாகி வருகிறது.



Click it and Unblock the Notifications