Home / Photos
இரண்டாவது முறை கர்ப்பம்.. குடும்பத்துடன் கொண்டாடி மகிழ்ந்த 'தலைவன் தலைவி' பட நடிகை.. கிளிக்ஸ்!
By Chandru
பிரபல குணச்சித்திர நடிகை இரண்டாவது முறை கர்ப்பமாக இருக்கும் நல்ல செய்தியை வீடியோ மூலம் இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார்.
1/6
Photo Credit: instagram@myna nandhini
Share
2007ல் வெளிவந்த நாதஸ்வரம் சீரியலில் சின்ன ரோலில் நடித்து தனது திரை பயணத்தை தொடங்கியவர் நடிகை மைனா நந்தினி. சில நிகழ்ச்சிகளில் விஜே-வாகவும் பணியாற்றியுள்ளார்.
2/6
Photo Credit: instagram@myna nandhini
Share
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'சரவணன் மீனாட்சி 2' சீரியலில் மைனா கதாபாத்திரத்தில் நடித்து பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானார். அந்த மைனா கதாபாத்திரம் இவரை மிகவும் பிரபலப்படுத்தியதை தொடர்ந்து தனது பெயருக்கு முன் மைனா பெயரை சேர்த்து கொண்டார். அப்போதில் இருந்து மைனா நந்தினி என மக்களால் அன்போடு அழைக்கப்பட்டு வருகிறார்.
3/6
Photo Credit: instagram@myna nandhini
Share
தொடர்ந்து சரவணன் மீனாட்சி 3, சின்ன தம்பி, அரண்மனை கிளி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வந்தார். சீரியலில் மட்டுமல்லாமல் ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்துகொண்டு மக்கள் கவனம் ஈர்த்த இவர், படங்களிலும் நடிக்கத் தொடங்கினார்.
4/6
Photo Credit: instagram@myna nandhini
Share
வெண்ணிலா கபடி குழு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, நம்ம வீட்டு பிள்ளை, அரண்மனை 3, விக்ரம், விருமான், சர்தார், தலைவன் தலைவி உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனம் வென்றுள்ளார்.
5/6
Photo Credit: instagram@myna nandhini
Share
சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் கலக்கிக்கொண்டிருக்கும் மைனா, சமீபத்தில் புது வீடு கட்டி குடியேறினார். இந்த நிலையில் தற்போது மீண்டும் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ் தெரிவித்துள்ளார்.
6/6
Photo Credit: instagram@myna nandhini
Share
மைனா நந்தினி தனது கணவர் யோகேஷுடன் திருமண நாளை கோலாகலமாக கொண்டாடிய நிலையில் அதனுடன் தான் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் செய்தியையும் அறிவித்து கணவருக்கே ஷாக் கொடுத்துள்ளார். ஏற்கனவே இந்த ஜோடிக்கு ஆண் குழந்தை உள்ளது, தற்போது இரண்டாவது முறை மைனா கர்பமாகியுள்ளார். தற்போது மைனாவின் வீடியோ மற்றும் போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.



Click it and Unblock the Notifications