Home / Photos
OTT: இந்த வார ஓடிடி ரிலீஸ் லிஸ்ட்.. தமிழ், தெலுங்கு, மலையாள படங்கள் என்னென்ன?
By Chandru
இந்த வாரம் ஓடிடி தளங்களை அலங்கரிக்கவரும் புது தென்னிந்திய திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/5
Photo Credit: IMDB
Share
அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் 'அன்பில் அவன்'. காதல் கலந்த ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இப்படம், நாளை 20ம் தேதி சோனி லைவ் ஓடிடியில் ரிலீஸாகவுள்ளது.
2/5
Photo Credit: IMDB
Share
புதுமுக நடிகை, நடிகர் நடிப்பில் வெளிவந்த ரொமான்டிக் ட்ராமா திரைப்படம் 'ஹைக்கூ'. காதலியால் கைவிடப்பட்ட நாயகனும், காதலனால் மனஅழுத்தத்திற்கு ஆளான நாயகிக்கும் இடையே மலரும் காதல் பற்றிய கதை. இப்படம், நாளை 20ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸாகவுள்ளது.
3/5
Photo Credit: IMDB
Share
சைக்கலாஜிக்கல் ஹாரர், திரில்லர் ஜானரில் வெளிவந்த திகில் தெலுங்கு திரைப்படம் '418'. தரமான திகில் சம்பவங்கள் நிறைந்த இப்படம், நாளை 20ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸாகவுள்ளது. தெலுங்கில் மட்டுமல்லாமல் தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் ரிலீஸாகவுள்ளது.
4/5
Photo Credit: IMDB
Share
காமெடி ஃபேமிலி ட்ராமா ஜானரில் வெளிவந்த மற்றொரு தெலுங்கு திரைப்படம் 'Crazy Kalyanam'. கேரியரில் அதிக கவனம் செலுத்தி வரும் மகளுக்கு மாப்பிள்ளை தேடும் அப்பாவின் கதை. மற்றொரு பக்கம் மகள் ஒரு இளைஞனை காதலிக்கிறார், திருமணமும் செய்துகொள்கிறார். பகலில் நார்மலாகவும் இரவில் குடிபோதையில் இருக்கும் மருமகனின் செயலால் பெண்ணின் அப்பா என்ன செய்யப்போகிறார் என்பதே படத்தின் காமெடி கலந்த கதை. இப்படம், தெலுங்கு மற்றும் தமிழில் நாளை 20ம் தேதி ஆஹா வீடியோ ஓடிடியில் ரிலீஸாகவுள்ளது.
5/5
Photo Credit: IMDB
Share
காமெடி, ஹாரர், திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள தெலுங்கு திரைப்படம் 'Anumana Pakshi'. காதல், குடும்பம், மர்மம் என விறுவிறுப்பான அனுபவத்தை கொடுக்கும் இப்படம், நாளை 20ம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ரிலீஸாகவுள்ளது.



Click it and Unblock the Notifications