இன்று தியேட்டரில் ரிலீஸான திரைப்படங்கள்.. வரிசைக்கட்டிய மலையாள படங்கள்.. என்னென்ன? லிஸ்ட்!
இன்று 13ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகியுள்ள சுவாரசியம் நிறைந்த புது திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
திலீஷ் போத்தன், சாகர் சூர்யா, வினீத், அதிதி பாலன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள மலையாள திரைப்படம் 'Bouma'. மிஸ்ட்ரி, திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படம் இன்று 13ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.
அதிரடி ஆக்ஷன் ஜானரில் உருவாகியுள்ள ஹாலிவுட் திரைப்படம் 'Ghost Soldier'. பெரிய கார்ப்பரேட் நிறுவனத்திடம் இருந்து கிராமப்புற மக்களை பாதுகாக்கும் ஹீரோவின் கதை. இப்படம் இன்று 13ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாகியுள்ளது.
அர்ஜுன் தாஸ், சாஞ்சனா நட்ராஜன், ஸ்ரிஷ்டி சிங் உள்ளிட்டோர் நடிப்பில் சைக்கலாஜிக்கல் திரில்லர், க்ரைம், ஹாரர், மிஸ்ட்ரி ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஜான் டோ'. திருப்பங்கள் நிறைந்த இந்த போலீஸ் இன்வெஸ்டிகேசன் படம் இன்று 13ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.
அனஸ்வரா ராஜன், அகில் நடிப்பில் தெலுங்கில் உருவாகியுள்ள ஆக்ஷன், க்ரைம், ரொமான்ஸ் மற்றும் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் 'Itllu Arjuna'. இப்படம், இன்று 13ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.
அன்னம்மா, அர்ஜுன் அசோகன், தியா தீபன் உள்ளிட்டோர் நடிப்பில் மலையாளத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'Melcow Pondicherry'. காமெடி கலந்த த்ரில் சம்பவங்கள் நிறைந்த இப்படம், இன்று 13ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.



Click it and Unblock the Notifications