Home / Photos
பாமக கட்சியின் போராட்டத்தில் அரசு பேருந்து கண்ணாடி உடைப்பு...! கள்ளக்குறிச்சியில் பரபரப்பு...! போலீசார் குவிப்பு!
By Chandru
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பாமக கட்சியின் போராட்டத்தில் அரசு பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
1/7
Share
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பாமக கட்சியின் போராட்டத்தில் அரசு பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
2/7
Share
வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்த உயர்நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து பாமகவினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
3/7
Share
இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அடுத்த பகண்டை கூட்டுரோட்டில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் உயர் நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்யக் கோரி பாமகவினர் போராட்டம் நடத்தினர்.
4/7
Share
மேலும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் மீது தமிழக அரசு உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பாமகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
5/7
Share
இந்நிலையில் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த பாமக பிரமுகர் ஒருவர் அவ்வழியாக வந்த அரசு பேருந்து மீது கல் வீசி தாக்குதலில் ஈடுபட்டார்.
6/7
Share
இச்சம்பவத்தால் அரசுப் பேருந்து ஓட்டுநர் மற்றும் பேருந்தில் பயணம் செய்த பெண் என இருவர் கல்வீச்சில் தாக்கப்பட்டதில் படுகாயம் அடைந்தனர்.
7/7
Share
இந்நிலையில் இச்சம்பவம் காரணமாக பகண்டை கூட்ரோடு பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது இதனால் போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.



Click it and Unblock the Notifications