பெரும் தலைகளை எதிர்த்து இளம் ரத்தங்கள்.. தேர்தல் களத்தில் புது எனர்ஜியை பாய்ச்சும் எடப்பாடி பழனிசாமி
சென்னை: திமுக, பாஜக ஆகிய கட்சிகள் சீனியர்களையும், பெரும் தலைகளையும் களத்தில் இறக்கி இருக்க, எடப்பாடி பழனிசாமியோ இளம் ரத்தங்களை ஆட்டத்தில் இறக்கி விட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் பரபரப்பான கட்டத்தை எட்டிவிட்டது. அனைத்து கட்சித் தலைவர்களும், வேட்பாளர்களும் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் திமுக மற்றும் பாஜக மிகவும் அனுபவமிக்க அதே சமயத்தில் அனைவருக்கும் பரிட்சையமான வேட்பாளர்களை அறிமுகப்படுத்திருக்கும் நிலையில் அதிமுகவின் வேட்பாளர் பட்டியல் அனைவருக்கும் சர்ப்ரைஸ் ஆக அமைந்திருக்கிறது.

பல முன்னாள் அமைச்சர்களும் ஏற்கனவே பரிட்சையமானவர்களும் அதிமுக சார்பில் களம் இறக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி ஏறத்தாழ அனைத்து தொகுதிகளிலும் புதுமுகங்களுக்கும் இளைஞர்களுக்கும் வாய்ப்பளித்து உள்ளார்.
சொல்லப்போனால் தென்சென்னை வேட்பாளர் ஜெயவர்தனை தவிர எல்லோருமே புதுமுகங்கள் தான். குறிப்பாக எடப்பாடி பழனிசாமியின் சொந்தத் தொகுதியான சேலத்தில் திமுக ஜாம்பவான் செல்வகணபதி போட்டியிடும் நிலையில், அவரை எதிர்த்து வெறும் 30 வயதே ஆன விக்னேஷ் என்ற இளைஞருக்கு வாய்ப்பு அளித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.
அதேபோல் அதிமுகவின் முக்கியமான கோட்டையாகத் திகழும் கோவை தொகுதியில் சிங்கை ராமச்சந்திரன், நீலகிரி தொகுதியில் லோகேஷ் தமிழ்ச்செல்வன் என பல இளைஞர்களுக்கு வாய்ப்பு அளித்துள்ளார். இதைத் தவிர பல புது முகங்களுக்கும், ஒன்றிய கழக நிர்வாகிகளுக்கும் சார்பு அணியைச் சேர்ந்தவர்களுக்கும் வாய்ப்பு அளித்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
இது எடப்பாடி பழனிசாமி எடுத்திருக்கக் கூடிய மிகப்பெரிய ரிஸ்க்காக பார்க்கப்பட்டாலும், அதிமுக தொண்டர்கள் இடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணம் என்னவென்றால் அதிமுகவில் எப்போதும் ஒரு சாதாரண தொண்டனுக்கும் எந்த நேரத்திலும் எந்த பதவியும் கிடைக்கலாம் என சொல்லிக் கொண்டே வந்துள்ளனர்.
அந்த வகையில் இந்த லோக்சபா தேர்தலின் வேட்பாளர் பட்டியலும் அதை நிருபித்திருக்கிறது என்பதை அதிமுக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த உற்சாகத்துடன் அதிமுக ரத்தத்தின் ரத்தங்கள் களத்தில் மிகத் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஒன்று சேர்ந்த எடப்பாடி - ஸ்டாலின் குடும்பம்.. அதிமுக உடைந்ததே அதனால் தான்! போட்டுடைத்த சிடிஆர்! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன?












Click it and Unblock the Notifications