கோவையில் மே 3-ம் தேதி நடக்கும்.. ‘ஸ்டடி அப்ரோட் எஜூ எக்ஸ்போ 2025' வெளிநாட்டுக் கல்வி கண்காட்சி

Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்: சாண்டாமோனிகா ஸ்டடி அப்ரோட் கல்வி நிறுவனம் வழங்கும் 'ஸ்டடி அப்ரோட் எஜூ எக்ஸ்போ 2025' வெளிநாட்டுக் கல்வி கண்காட்சி.. கோவையில் மே 3ம் தேதி நடக்க உள்ளது.

30க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள 800-க்கும் மேற்பட்ட புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகளின் அதிகாரப்பூர்வ பிரதிநிதியாக திகழும் சாண்டாமோனிகா ஸ்டடி அப்ரோட் கல்வி நிறுவனம் தற்போது 'ஸ்டடி அப்ரோட் எஜூ எக்ஸ்போ 2025' என்னும் வெளிநாட்டுக் கல்வி கண்காட்சியினை கோவை அவினாசி சாலையில் உள்ள ராடிசன் புளூ ஹோட்டலில் 03.05.2025 அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடத்துகிறது. அனுமதி இலவசம். கல்விக் கடன் அளிப்பதில் முன்னணியில் திகழும் கிரெடிலா நிறுவனம் இக்கண்காட்சியின் முக்கிய ஸ்பான்சராக உள்ளது.

Coimbatore

இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் கல்வி பயில தேவையான அனைத்து சேவைகளையும் 23 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பான முறையில் வழங்கி வருகிறது 'சாண்டாமோனிகா ஸ்டடி அப்ரோட்" கல்வி நிறுவனம். ஐக்கிய நாடுகள் சபையின் குளோபல் எக்சலன்ஸ் விருதினை இந்நிறுவனம் பெற்றுள்ளது மற்றும் ஆசிய சாதனை புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது.

கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்வீடன், அயர்லாந்து மற்றும் பல நாடுகளைச் சேர்ந்த சிறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் பிரதிநிதிகளை நேரில் சந்திக்கும் வாய்ப்பினை இக்கண்காட்சி வழங்குகிறது. மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் இது வரப்பிரசாதமாகும். உலக அளவில் சிறந்த வேலை வாய்ப்புகளை பெறும் வகையிலான 30,000-க்கும் மேற்பட்ட படிப்புகள் குறித்த விபரங்களை இக்கண்காட்சியில் பெற முடியும். மேலும் ரூபாய் ஒரு லட்சம் மதிப்புள்ள இலவச கூப்பன்கள் மற்றும் விண்ணப்ப கட்டண சலுகைகள் மற்றும் உடனடி சுயவிபர மதிப்பீடுகள் ஆகியவற்றை இக்கண்காட்சியில் மாணவர்கள் பெற முடியும். 600-க்கும் மேற்பட்ட உலகளாவிய பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகளில் சேர உடனடியாக விண்ணப்பிக்கும் வசதியினையும் இக்கண்காட்சி வழங்குகிறது.

கல்விக் கடன் வழங்கும் முன்னணி வங்கிகளும் இக்கண்காட்சியில் பங்குபெறுகின்றன. முழு நேர மற்றும் பகுதி நேர வெளிநாட்டு படிப்புகள் குறித்த கருத்தரங்கங்களும் நிபுணர்களின் வாயிலாக மாணவர்களுக்கு நடத்தப்படுகிறது. மாணவர்களுக்கு தேவையான விசா உதவிகளும் செய்யப்படுகிறது. இக்கல்விக் கண்காட்சிக்கு வருகை தரும் மாணவர்கள் விண்ணப்பிக்க தேவையான உரிய ஆவணங்களை எடுத்து வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் விபரங்களுக்கு 9840338888, 9845243311 என்ற அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளவும். இணையதள முகவரி : www.santamonicaedu.in

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+