அடிச்சாலே சிக்ஸர் தான்.. தேர்தல் களத்தை பற்ற வைக்கும் எடப்பாடி பழனிசாமியின் புதிய அவதாரம்!
சென்னை: தமிழ்நாட்டு அரசியல் களத்தில் எதிர்பார்க்காத திருப்பங்களை அடுத்தடுத்து உருவாக்கி அதிரடி ஆட்டம் ஆடிக்கொண்டிருக்கிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
பாஜகவின் கூட்டணிக்கட்சி என்ற ஒற்றை வாதத்தால் எளிதில் முடக்கிவிட முடியும் என்று திமுக எண்ணிக்கொண்டிருந்த சமயத்தில் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று உறுதியாக அடித்தார் எடப்பாடி பழனிசாமி. சொல்லப்போனால், கட்டிப்பிடித்திருந்த கரடி அலட்சியமாக அசந்த நேரம் அதுபுத்திசாலித்தனமாக தப்பிப்பதைப் போன்ற முடிவு அது. அதன்பிறகு கரடியின் நெருக்கடிகளிலிருந்து தப்பிப்பதே போதும் போதும் என்று இருந்திருக்கும். ஆனால், அதையும் தாண்டி பிரசாரங்களைத் தொடங்கிய ஒரே வாரத்தில் ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் அதிமுகவை மீண்டும் காட்டினார் எடப்பாடி பழனிசாமி.

சாதுவான, சிரித்த முகமாக அறியப்பட்ட எடப்பாடி பழனிசாமி மேடைக்கு மேடை புது அவதாரமெடுத்தார் என்பதை தமிழ்நாடு பார்த்தது. மெல்ல மெல்ல இளைஞர்களின் கவனத்தை ஈர்த்த எடப்பாடி பழனிசாமி, அடுத்தடுத்த மேடைகளில் ஆவேசமாக அடித்து ஆடினார்.
தன் மீதும் அதிமுக மீதும் வைக்கப்படும் விமர்சனங்களை அவர் எதிர்கொண்ட விதம்தான் அடுத்த லெவலுக்கு அவரை உயர்த்தியது. வாசகங்களுக்கு வாசகம், போட்டோவுக்கு போட்டோ, புகார் பெட்டிகள் என இவர் கையாண்ட பிரசார உத்திகள் திமுகவினரின் பிரச்சார உத்திகளை வெகு எளிதாக ஓவர்டேக் செய்தன. திமுக என்னும் பிம்பத்தால் கவனிக்கப்படாமல் இருந்த அதிமுகவின் பலத்தை அசுர வேகத்தில் வெளிக்காட்டிய இந்த நிகழ்வுகளால் மீண்டும் தமிழ்நாட்டு அரசியலில் தன் ஆளுமையை நிலைநாட்டியுள்ளது அதிமுக.
பிரச்சார மேடைகள் ஒருபுறமென்றால் தேர்தல் நேரத்தில் செய்தியாளர் சந்திப்புகள் மற்றும் ஊடகப் பேட்டிகளை கையாண்ட விதம் தனிச்சிறப்பு. கூட்டணி குறித்த கேள்விகள், எதிர்தரப்பினரின் விமர்சனங்கள் என எந்தக் கேள்வி வந்த போதும் தனக்கே உரிய பாணியில் சிரித்தபடி கொடுத்த சவுக்கடி பதில்கள் ஒவ்வொன்றுமே டாப்.
குறிப்பாக அதிமுக ஆட்சி காலத்தில் வாங்கிய கடன்கள் குறித்தும் அந்த கடன்களை செலவு செய்தது குறித்தும், மூலதன செலவுகளின் முக்கியத்துவம் குறித்தும் எடப்பாடி பழனிசாமி பேசிய பேச்சு, படித்த இளைஞர்கள் இடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுக்குறித்து அவர் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. அதுமட்டும் இல்லாமல் விவசாயம், நீர் மேலாண்மை, மாநில உரிமை என எந்த சப்ஜெக்ட்டை எடுத்தாலும் அடித்து ஆடுகிறார் எடப்பாடி.
மொத்தத்தில், மீண்டும் அதிமுக தன் பழைய ஃபார்முக்கு வந்திருப்பதை தமிழ்நாடு, குறிப்பாக இளைய தலைமுறைக்கு காட்டிவிட்டார் எடப்பாடி பழனிசாமி. அடிச்சாலே சிக்ஸர் தான் பாணியில் அடித்து ஆடிய ஆட்டத்திற்கான நல்ல பலனை ஜுன் 4 ஆம் தேதி எதிர்பாக்கலாம்.
-
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
இசக்கி சுப்பையா டூ கடம்பூர் ராஜு.. இதுவரை எத்தனை அதிமுக மாஜி அமைச்சர்கள் தவெகவில் ஐக்கியம்! லிஸ்ட் -
சைலண்ட்டா முடிந்த சாவி மேட்டர்! விழுப்புரம் சண்முகம் ஆதரவாளர்களை மொத்தமா தூக்கிய எடப்பாடி! ஏன் -
இதுக்கு ஒரு எண்டே இல்லையா சாரே! எடப்பாடிக்கு மீண்டும் மீண்டும் தலைவலி! கட்சி தாவ தயாராகும் தலைகள்! -
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. உங்களுடன் நிற்கும் கம்யூனிஸ்ட்டுகள் சொல்றாங்க.. விளாசிய எடப்பாடி! -
"ஆதவ் அர்ஜுனா வாயை அடக்கிப் பேசணும்.. அதிமுகவை பற்றி பேச அருகதை இல்லை".. கேபி முனுசாமி தாக்கு! -
விஜய் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றல.. எல்லாம் போச்சு.. அப்செட்டில் இருக்கும் அதிமுக புள்ளிகள்! -
பனையூரில் பின்வாசல் வழியாக நுழைய முயன்ற அதிமுகவினர்! ஒரே தள்ளுமுள்ளு! விஜய் ஆபீஸில் என்ன நடக்கிறது -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
இது ட்ரெய்லர் தான்.. அதிமுகவுக்கு தவெக எழுதப்போகும் கிளைமாக்ஸ்.. அருண்ராஜ் அதிரடி












Click it and Unblock the Notifications