ரூ.11.99 லட்சத்தில் புதிய ஹோண்டா சிட்டி கார்.. இளம் ஜென் Z வாடிக்கையாளர்களுக்கு பக்காவான சாய்ஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம், இந்திய வாகன சந்தையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த புதிய 'ஹோண்டா சிட்டி எம்எம்சி' செடான் காரை, கேப்பிட்டல் ஹோண்டா டீலர்ஷிப் வளாகத்தில் கோலாகலமாக அறிமுகம் செய்துள்ளது. நேர்த்தியான வடிவமைப்பு, மேம்பட்ட தொழில்நுட்பம், நவீன வசதிகள் மற்றும் சிறப்பான செயல்திறன் ஆகியவற்றுடன் வெளிவந்துள்ள இந்த காரின் ஆரம்ப விலை ரூ.11,99,900 (எக்ஸ்-ஷோரூம்) ஆகும்.

புதிய ஹோண்டா சிட்டி எம்எம்சி கார், பல்வேறு பிரீமியம் அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதில் பிளேட்-ஐ சிக்னேச்சர் எல்இடி லைட்டிங் சிஸ்டம், சிக்னேச்சர் பை-எல்இடி புரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள், ஸ்பிளிட் எல்இடி டிஆர்எல்கள் (DRLs), டர்ன் சிக்னல்கள், சிக்னேச்சர் மேட்ரிக்ஸ்-மெஷ் பிளாக் முன் கிரில் மற்றும் சில்வர் ட்ரிம் கவர்களுடன் கூடிய R16 ஸ்டீல் வீல்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

Honda Cars

.
மேலும், புதுப்பிக்கப்பட்ட வெளிப்புறத் தோற்றம், ஆடம்பரமான உட்புற வடிவமைப்பு, மேம்பட்ட இன்போடெயின்மென்ட் வசதிகள் மற்றும் நவீன பாதுகாப்பு அமைப்புகள் ஆகியவை ஓட்டுநருக்கு ஒரு பிரீமியம் அனுபவத்தை உறுதி செய்கின்றன. வாடிக்கையாளர்களின் திருப்தி மற்றும் புதுமையான தயாரிப்புகளை வழங்குவதில் ஹோண்டா நிறுவனத்திற்கு இருக்கும் அர்ப்பணிப்பை இந்த புதிய கார் மீண்டும் நிரூபித்துள்ளது.

நிகழ்ச்சியில் கேப்பிட்டல் ஹோண்டா டீலர்ஷிப் பிரதிநிதிகள் பேசுகையில், "ஸ்டைல், வசதி, தொழில்நுட்பம் மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றின் சரியான கலவையாக இந்த கார் உருவாகியுள்ளது. குறிப்பாக, இந்த கார் மிகவும் ஸ்போர்ட்டியானது மற்றும் இளம் ஜென் Z (Gen Z) வாடிக்கையாளர்களுக்கு ஏற்றது. நவீன கார் வாங்குபவர்களின் வளர்ந்து வரும் எதிர்பார்ப்புகளை இந்த மாடல் முழுமையாகப் பூர்த்தி செய்யும்" என்று குறிப்பிட்டனர்.

இவ்விழாவில் தேசிய டென்னிஸ் வீரர் அஜய் செல்வராஜ், பிரபல பின்னணிப் பாடகர் சாய் சரண், உயர் நீதிமன்றத்தைச் சேர்ந்த ஜெய்னி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

மேலும், ஹோண்டா கார்ஸ் இந்தியாவின் மண்டல மேலாளர் மோகன் குமார், வணிகப்பிரிவு தலைவர் சுப்பு கார்த்திகேயன், பராமரிப்பு சேவைப்பிரிவு தலைவர் சரவணன், கே.யு.என் (KUN) குழுமத்தின் மனிதவள பிரிவு தலைவர் ஜெகதீஷ், விஜய் பிரிலால்ஸ் பார்வை, பராமரிப்பு சேவைப்பிரிவு மேலாளர் வில்சன் மற்றும் விற்பனை மேலாளர் சுரேந்தர் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களும், வாடிக்கையாளர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

விழாவின் ஒரு பகுதியாக, வாகன ஆர்வலர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு காரின் சிறப்பம்சங்கள் குறித்த விளக்கக்காட்சிகள் காண்பிக்கப்பட்டு, கலந்துரையாடல்களும் நடத்தப்பட்டன. அத்துடன், காரை ஓட்டிப் பார்க்கும் பிரத்யேக டெஸ்ட் டிரைவ் வாய்ப்பும் வழங்கப்பட்டது. காரின் புதிய ஸ்டைல், பிரீமியம் வசதிகள் மற்றும் தொழில்நுட்பங்களை வாடிக்கையாளர்கள் பெரிதும் பாராட்டியதுடன், இந்த புதிய மாடல் குறித்து மிகுந்த உற்சாகத்தையும் வெளிப்படுத்தினர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+