சென்னை முகப்பேரில் ஜெரி கேரின் புதிய அசிஸ்டெட் லிவிங் சென்டர்.. சிறப்பு என்ன? சேருவது எப்படி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: முப்பதாண்டுகளுக்கும் மேலான அர்ப்பணிப்பான சேவையுடன் முதியோர் நல பராமரிப்புக்கான முன்னணி நிறுவனமாக விளங்கும் ஜெரி கேர், சென்னை முகப்பேரில் புதிய வாழ்க்கை உதவி மையத்தின் (Assisted Living Centre) தொடக்கத்தைப் பெருமையுடன் அறிவிக்கிறது. தொலைநோக்கு பார்வைகொண்ட நிறுவனர்களான டாக்டர் லக்ஷ்மிபதி ரமேஷ், டாக்டர் வி ஸ்ரீனிவாஸ் ஆகியோரின் சிந்தனையில் உருவான ஜெரி கேர் நெட்வொர்க்கில் இந்த புதிய மையம் குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும்.

முகப்பேரிலுள்ள இந்த மையம், ஜெரி கேரை இந்தியாவில் ஒரு முன்னோடி நிறுவனமாகத் தனித்துவத்துடன் காட்டுகிறது. 24x7 வாழ்க்கை உதவி சேவைகள் மற்றும் திறமையான நர்சிங் சேவைகளை இது அளிக்கிறது. மருத்துவமனை மற்றும் அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய மறுவாழ்வு முதல் நீண்ட கால ஆதரவு பராமரிப்பு, சிறப்பு டிமென்ஷியா பராமரிப்பு மற்றும் நோய்த்தடுப்பு சிகிச்சை வரை இந்த மையம் முதியோர்களின் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Jerry Cares new Assisted Living Center in Chennai Mukappher: Whats special? How to join?

இந்த மையத்தில் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட முதியோர் நல மருத்துவர்கள், திறமையான செவிலியர்கள் மற்றும் சிகிச்சையாளர்கள் ஒருங்கிணைந்து மூத்த குடிமக்களுக்கு சிறந்த கவனிப்பை வழங்குவதற்காகப் பணியாற்றுகின்றனர்.

ஜெரி கேர் நிறுவனத்தின் இலக்கிலேயே முழுமையான நல்வாழ்வுக்கான அர்ப்பணிப்பு உள்ளது. அதற்கேற்ப முகப்பேர் மையத்திலும் வசதிகளையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் அதிநவீன மருத்துவ உபகரணங்களும் உயர்தர வசதிகளும் உள்ளன. ஊட்டச்சத்துக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது, தனிப்பட்ட சுகாதாரத் தேவைகளுக்கேற்ப உணவியல் நிபுணரால் தேர்ந்தெடுக்கப்பட்ட உணவுகள் வழங்கப்படுகின்றன. இந்த மையம் உடல் மற்றும் அறிவாற்றல் நல்வாழ்வின் முக்கியத்துவத்தையும் முதன்மைப்படுத்துகிறது. அதற்கேற்ப மேம்பட்ட பிசியோதெரபி மற்றும் அறிவாற்றல் ஆரோக்கிய கண்காணிப்பை வழங்குகிறது.

இந்த மையத்தின் தொடக்க விழா, பத்மஸ்ரீ டாக்டர் வி.எஸ். நடராஜன் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர் ஸ்ரீ கே. லக்ஷ்மிகாந்தன் பாரதி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இவர்கள் இருவரும் முதியோர் பராமரிப்பில் ஜெரி கேரின் விரிவாக்கத்தின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுப் பேசினார்கள். ஜெரி கேர் குழுவின் பல ஆண்டுகால அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பின் ஆதாரமாக இந்நிகழ்ச்சி இருந்தது.

ஜெரி கேர் நிறுவனத்தின் முகப்பேர் சென்டர் ஒரு மருத்துவ மையம் மட்டுமல்ல... சமூகத் தொடர்பு மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் ஒரு சமூக இடமும்கூட. இது அதன் விருந்தினர்களுக்கு சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கிறது. முதியவர்களுக்கு சிகிச்சை அளிப்பதோடு, கனிவும் அக்கறையும் உள்ள ஓர் இனிய சூழலில் அவர்களின் வாழ்க்கையை வளப்படுத்த வேண்டும் என்கிற நிறுவனர்களின் அணுகுமுறை இங்கு இயல்பாக வெளிப்படுகிறது.

இந்த புதிய மையம், தங்கள் அன்புக்குரிய வயதான உறவுகளுக்கு தரமான பராமரிப்பைத் தேடும் குடும்பங்களுக்கு புதிய நம்பிக்கை அளிக்கிறது.

முகப்பேர் மையத்தில் கிடைக்கும் விரிவான சேவைகள் மற்றும் வசதிகள் பற்றிய கூடுதல் தகவலுக்கு அல்லது முதியோர் பராமரிப்புக்கான ஜெரி கேரின் சேவைகளைப் பற்றி மேலும் அறிய தொடர்பு கொள்ள...ஜெரி கேர் மருத்துவமனை.. தொலைபேசி: 99444 59444 | 044-4061 4061

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+