மகா சிவராத்திரி.. ஆதி யோகி ரத யாத்திரை.. தமிழகம் முழுவதும் 20 ஆயிரம் கி.மீ பயணம்
கோவை: மகா சிவராத்திரியை முன்னிட்டு கோவை ஈஷா யோக மையத்தில் இருந்து ஆதியோகி ரத யாத்திரை தொடங்கியது. ஆதியோகி திருமேனியுடன் கூடிய 4 ரதங்கள், தமிழகம் முழுவதும் சுமார் 20 ஆயிரம் கி.மீ தூரம் வரை பயணிக்க உள்ளன.
கோவை ஈஷா யோக மையத்தில் மகா சிவரத்திரி விழா ஆண்டு தோறும் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி தென் கயிலாய பக்தி பேரவை சார்பில், மகா சிவராத்திரி விழாவுக்கு பக்தர்களுக்கு அழைப்பு விடுக்கும் விதமாக ஆண்டுதோறும் ஆதியோகி ரத யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், நடப்பாண்டுக்கான யாத்திரை கோவை ஈஷா வளாகத்தில், ஆதியோகி முன்பிருந்து நேற்று முன்தினம் தொடங்கியது.
பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் ரத யாத்திரையை தொடங்கி வைத்து பேசும் போது, ''இறைவனை வழிபடுவதில் இரண்டு வகை உண்டு. ஒன்று நாம் இறைவனை தேடிச் சென்று வணங்குவது. மற்றொன்று இறைவன் நமக்காக வீதிகள்தோறும் வந்து நமக்கு அருள்பாலிப்பது.

அந்த வகையில் இந்த ஆதியோகி ரத யாத்திரை அடியார்களுக்கு அருள் புரியும் தன்மையோடு, தமிழகம் முழுவதும் வலம்வர இருக்கிறது. சிவ பெருமானுக்கு உரிய மகா சிவராத்திரியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த ரத யாத்திரை அமைய உள்ளது. சிவகண வாத்தியம், திருமுறை பன்னிசை போற்றி வழிபாடு உள்ளிட்ட நிகழ்வுகளோடு வலம் வர உள்ள இந்த ரத யாத்திரையை அடியார்கள் பயன்படுத்தி சிவனருள் பெற வேண்டும்'' என்றார்.
ஆதியோகி திருமேனியுடன் கூடிய 4 ரதங்கள், தமிழகம் முழுவதும் சுமார் 20 ஆயிரம் கி.மீ தூரம் வரை பயணிக்க உள்ளன. ஒவ்வொரு ரதமும் ஒவ்வொரு திசையில் பயணித்து, மகா சிவராத்திரி நாளன்று கோவை ஈஷா யோக மையத்தை வந்தடையும் என ஈஷா அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

ஆதியோகியை நேரில் தரிசிக்க முடியாத மக்கள் தங்கள் ஊர்களிலேயே ஆதியோகியை தரிசனம் செய்யும் வாய்ப்பு நேரில் கிடைத்துள்ளது.



-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications