காஞ்சிபுரம் மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் 832 பேருக்கு பட்டம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள மீனாட்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள கலையரங்கத்தில் மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகத்தின் சார்பில் இன்று 18 வது ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது. இந்த விழாவில் 832 பேர் பட்டம் பெற்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் எனாத்தூரில் மீனாட்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் அமைந்துள்ளது. இன்று மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகத்தின் (MAHER)18 வது பட்டமளிப்பு விழா நடந்தது.

கல்லூரி கலையரங்கத்தில் நடந்த விழாவில் அந்நிறுவனத்தின் வேந்தர் ஜெயந்தி இராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். நிறுவனத்தின் கவுரவ வேந்தரும், தலைமை புரவலருமான கோமதி இராதாகிருஷ்ணன், இணை வேந்தர் ஆகாஷ் பிரபாகர் கலந்து கொண்டனர்.
டாக்டர் மோகனின் நீரிழிவு நோயிற்கான சிறப்பு மருத்துவ மையம் மற்றும் மெட்ராஸ் நீரிழிவு நோய் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவருமான பத்மஸ்ரீ டாக்டர் வி மோகன் இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பட்டளமிறிப்பு விழாவை சிறப்பித்தார். அவர் பட்டம் பெறும் மாணவர்களை தன்னுடைய அறிவாற்றலாலும் அனுபவத்தாலும் ஊக்குவித்தார்.
இந்த பட்டமளிப்பு விழா தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. வரவேற்புரையை நிகழ்ச்சி ஜெயந்தி இராதாகிருஷ்ணன், ‛‛2004ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மீனாட்சி உயர்கல்வி மற்றும்ஆராய்ச்சிக்கழகம் (MAHER) க்கான சிறப்பான பயணத்தை பற்றியும், தரமான கல்வியை வழங்குவதை பற்றியும், ஆராய்ச்சி மற்றும் சுகாதார மேம்பாட்டில் இந்த கல்வி நிறுவனம் காட்டும் அர்ப்பணிப்பை பற்றியும் எடுத்துரைத்தார்.
துணை வேந்தர் பேராசிரியர் டாக்டர் சி ஸ்ரீதர் ஆண்டறிக்கையை சமர்ப்பித்து, நிறுவனம் அடைந்த முக்கியமான வெற்றிக்கம், பாடத்திட்ட மேம்பாடுகள், ஆராய்ச்சி முன்னேற்றங்கள், புதிய முயற்சிகள், கட்டிட வள விரிவாக்கம் மற்றும் மாணவர் நலன் உள்ளிட்ட பல்வேறு செயல்திறன்கைளை விளக்கினார்.
பத்மஸ்ரீ டாக்டர் வி மோகன் மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்சசி கழகத்தின் கீழ் இயங்கும் கல்வி நிறுவனங்களில் சிறப்பான சாதனைகள் மற்றும் அங்கீகாரங்களை பாராட்டி , பட்டம் பெறும் மாணவர்களை வாழ்த்தினார். மேலும், சமூககத்துக்கு அர்த்தமுள்ள பங்களிப்புகளை செய்யும் சேவை மனப்பான்மை உள்ள வா்க்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஊக்குவித்தார்.
சுகாதாரத்துறையில் பத்மஸ்ரீ டாக்டர் வி மோகன் செய்த அசாதாரண பங்களிப்பை மேலும் ஊக்கப்படுத்தும் படி, மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகத்தின் சார்பில் மெட்ராஸ் நீரிழிவு நோய் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு ரூபாய் 10 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டது. நுண்ணியல் நரம்பியல் அறுவை சிகிச்சை துறையில் தன்னை அர்ப்பணித்த நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கேஆர் சுரேஷ் பாபுவுக்கு ‛‛D.sc (Honoris Causa)'' பட்டம் வழங்கப்பட்டது.
இந்த விழாவில் 705 இளங்கலை மாணவர்கள், 103 மேற்படிப்பு மாணவர்கள் மற்றும் 24 முனைவர் பட்ட மாணவர்கள் என்று மொத்தம் 832 பேர் தங்கள் பட்டங்களை பெற்றனர். மருத்துவம், பல் மருத்துவம் நர்சிங், மருத்துவம் சார்ந்த அறிவியல் போன்ற துறைகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது. மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளின் மாணவர்கள் 76 பேர் தங்கள் படிப்பில் தனித்துவமான வெற்றியை அடைந்ததற்காக பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் பெற்றனர்.
விழாவின் சிறப்பான தருமணமாக மருத்துவ (MBBS) பட்டமளிப்பு மாணவிர் ஹரியதா குமாரி P.L மொத்தம் 11 பதக்கங்களை பெற்று, அதிக பதக்கங்களை பெற்ற சாதனையாளராக இருந்தார். விழாவில் இந்த நிறுவனத்தின் எட்டு சிறந்த பழைய மாணவர்களுக்கு கோமதி இராதாகிருஷ்ணன் மிகச்சிறந்த பழைய மாணவர் விருது 2024 வழங்கி கவுரவித்தார்.
மற்றொரு பெருமை மிகுந்த தருணம் என்னவென்றால் அன்பாக ‛இட்லி பாட்டி' என அழைக்கப்படும் கமலாத்தாள் பாட்டிக்கு ஜெயந்தி இராதகிருஷ்ணன் பரிசு (மகத்தான மானிதாபிமான சேவைக்கான விருது 2024) வழங்கினார் சமுதாயத்தின் பொருளாதார சவால்களை சந்திக்கும் மக்களுக்கு மலிவான உணவுகளை வழங்கும் தன்னலமற்ற சேவையில் பிரபலமான கலமாத்தாள், கருணை மற்றும் மகிழ்சசியின் ்டையாளமாக கவுரவிக்கப்பட்டார். அவருடைய மிகச்சிறந்த மனிதாபிமான முயற்சிகளை ஆதரிக்கும் வகையில், மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகம் சார்பில் ரூ.2 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டது. அதன்பிறகு தேசியக்கீதத்துடன் விழா நிறைவு பெற்றது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications