லத்தீன் அமெரிக்கன் கரீபியன் தூதுவராக கேஜி அனில்குமார் நியமனம்.. குவியும் பாராட்டுக்கள்
சென்னை: Adv. கேஜி அனில்குமார் அவர்களை குட்வில் அம்பாசிடராக நியமித்து LAC அதன் உலகளாவிய இருப்பை விரிவுப்படுத்தியுள்ளது.
லத்தீன் அமெரிக்கன் கரீபியன் (LAC) பிராந்தியத்திற்கு திரு. கே. ஜி. அனில்குமார் அவர்கள் குட்வில் அம்பாசிடராக நியமிக்கப்படுவதை அறிவிப்பதில் அமெரிக்க கரீபியன் வர்த்தக கவுன்சில் (LACTC) பெருமகிழ்ச்சி அடைகிறது. இந்த நியமனம், இந்திய, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் LAC நாடுகளுக்கு இடையே வர்த்தகம் மற்றும் சுற்றுலா அடிப்படையிலான தொடர்புகளை மேம்படுத்துவதற்கான ICL Fincorp நிறுவனத்தின் தொடர்ச்சியான முயற்சிகளுக்கு வலு சேர்க்கிறது. LACTC 2016 இல் நிறுவப்பட்டது, LAC பிராந்தியத்தின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அப்போதைய இணைச் செயலாளரால் துவக்கி வைக்கப்பட்டது.

இந்தியாவிற்கும் LAC க்கும் இடையேயான உறவிற்குப் பல சாதகமான விளைவுகள் இருந்தாலும், பல சவால்களும் உள்ளன. வரலாற்று, கலாசார பந்தத்தைப் பகிர்ந்துகொண்டாலும், வர்த்தகமும் சுற்றுலாத்துறையும் முழுமையான வளர்ச்சியை எய்தவில்லை. மொழித் தடைகள், புவியியல் தொலைவு, விதிமுறை கட்டமைப்புகளில் உள்ள வேறுபாடுகள் ஆகியவை குறிப்பிடத்தக்க தடைக்கற்களாகத் திகழ்கின்றன. கூடுதலாக, நேரடி விமானங்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதும், ஒருவரது மார்கெட்டைக் குறித்து மற்றெவருக்கு முழுமையான அறிதல் இல்லாததும் இந்த உறவிற்கு கூடுதல் தடையாக இருந்து வந்துள்ளது
திரு. கேஜி அனில்குமார் அவர்களை குட்வில் அம்பாசிடராக நியமிப்பது, இந்த முன்முயற்சிகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது. ICL Fincorp-இன் CMD திரு. கேஜி அனில்குமார் அவர்கள், நிதித்துறை மற்றும் சுற்றுலாத்துறையின் முக்கியப் புள்ளியாகத் திகழ்கிறார், இந்தியாவின் சர்வதேச நன்னம்பிக்கையை மேம்படுத்தி சர்வதேச கூட்டு முயற்சிகளை ஊக்குவிக்கும் பணியைச் செவ்வனே செய்துள்ளார். கியூபாவுடனான நமது உறவை வலுப்படுத்துவதற்கான அவரது முயற்சிகள், LAC பிராந்தியம் முழுவதுடனும் நமது ஈடுபாட்டை விரிவுப்படுத்துவதற்கான வலுவான அடித்தளமாக அமைந்துள்ளது. கூடுதலாக, ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) மூலம் LAC நாடுகளை ஒருங்கிணைத்து உறவுகளை நெருக்கமானதாக்க அவர் பணியாற்றுவார். வர்த்தகத்தை விரிவாக்கும் ஆவலுடன் இருக்கும் UAE இல் உள்ள குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான இந்திய வணிகங்களுக்கு UAE இல் உள்ள திரு. அனில்குமார் அவர்களின் அலுவலகம் முக்கியமான சந்திப்பிடமாகத் திகழ்கிறது. இந்தத் தளத்தின் மூலம் இந்திய நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை LAC பிராந்தியத்தில் விற்கலாம், அதேபோல UAE க்கு நீர் வழங்கும் சிலி, பெரு போன்ற லத்தீன் அமெரிக்கன் நாடுகள் இந்த மேம்படுத்தப்பட்ட தொடர்புகளின் மூலம் நன்மையடையலாம்.
இந்தச் சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதில் LACTC அதிபரான டா. ஆசீஃப் இக்பால் அவர்களின் முயற்சி குறிப்படத்தக்கது. அவருடைய தலைமையில், இலக்கு அடிப்படையிலான முயற்சிகள் மற்றும் மூலோபாய பார்ட்னர்ஷிப்களின் மூலம் இந்த இடைவெளிகளை நிரப்புவதற்கு கவுன்சில் அயராது உழைக்கிறது. இந்திய அரசு LACTC கவுன்சிலால் வழங்கப்பட்ட திரு. கே.ஜி. அனில்குமார் அவர்களின் முயற்சிகளை அங்கீகரித்துள்ளது, கியூபா உட்பட பல LAC அரசுகளும் இதையே நட்புடன் ஏற்றுக்கொள்கின்றன.
அவரது புதிய பொறுப்பில், திரு. கேஜி அனில்குமார் அவர்கள் இந்திய, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் மெக்ஸிகோ, குவாத்தமாலா, ஹோண்டுராஸ், நிகரகுவா, எல் சால்வடார், கோஸ்டாரிகா, பனாமா, பெலிஸ், ஹைட்டி, கியூபா, டொமினிகன் குடியரசு, ஜமைக்கா, டிரினிடாட் & டொபாகோ, பஹாமாஸ், பார்படாஸ், செயின்ட் லூசியா, கிரெனடா, செயின்ட் வின்சென்ட் & கிரெனடைன்ஸ், ஆன்டிகுவா மற்றும் பார்புடா, டொமினிகா, செயின்ட் கிட்ஸ் & நெவிஸ், பிரேசில், கொலம்பியா, அர்ஜென்டினா, பெரு, வெனிசுலா, சிலி, ஈக்வடார், பொலிவியா, பராகுவே, உருகுவே, சுரினாம் மற்றும் கயானா ஆகிய 33 லத்தீன் அமெரிக்கன் நாடுகளுக்கு இடையே மேம்படுத்தப்பட்ட வர்த்தகம் மற்றும் சுற்றுலா சார்ந்த முக்கியப் பிரிவுகளில் கவனம் செலுத்துவார். பிரெஞ்சு கயானா மற்றும் பியூர்டோ ரிகோ போன்ற சார்பு நாடுகள் மற்றும் பிரதேசங்களும் லத்தீன் அமெரிக்காவின் பகுதிகளாகும். புதிய வணிக வாய்ப்புகளை உருவாக்கவும், ஏற்கனவே உள்ள வர்த்தக உறவுகளுக்கு வலுவூட்டவும் அவர் பணியாற்றுவார். அவரது விரிவான நெட்வொர்க் மற்றும் மார்க்கெட் ஏற்ற இறக்கங்களின் புரிதலையும் பயன்படுத்தி திரு கேஜி அனில்குமார் அவர்கள் அளவிடக்கூடிய நன்மைகளை அனைத்து தரப்பினருக்கும் வழங்கும் பார்ட்னர்ஷிப்களை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டுள்ளார்.
திரு. கேஜி அனில்குமார் அவர்களின் நோக்கத்தின் குறிப்பிடத்தக்க இலக்கு சுற்றுலாத்துறையின் வளர்ச்சியாகும். சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கான அபரிமிதமான சாத்தியகூறை அடையாளம் கண்டு அவர், LAC பிராந்தியத்தின் தனிச்சிறப்பான கலாசார, வரலாற்று, இயற்கை எழில் கொஞ்சும் தளங்களை முன்னிறுத்தி சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கான முயற்சிகளைத் தொடங்கிவைப்பார். விளம்பரப் பிரச்சாரங்கள், சுற்றுலாக் கண்காட்சிகளில் பங்கேற்பு, சுற்றுலாத் துறையில் முன்னணி நிறுவனங்களுடன் மூலபாய கூட்டு முயற்சிகளில் ஈடுபடுவது போன்றவை அவரது திட்டங்களில் அடங்கும்.
கலாசாரப் பரிமாற்றமும் திரு. கேஜி அனில்குமாரின் அணுகுமுறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக இருக்கும். கலாச்சாரத் தொடர்புகள் மற்றும் புரிந்துணர்வை ஊக்குவிப்பதன் மூலம், இந்தப் பிராந்தியங்களில் வாழும் பலதரப்பட்ட மக்களிடையே வலுவான உறவுகளை உருவாக்குவதை அவர் நோக்கமாகக் கொண்டுள்ளார். இந்தக் கலாச்சார இராஜதந்திரம் நல்லெண்ணத்தை வளர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, நாடுகளுக்கு இடையே இன்னும் வலுவான பொருளாதார மற்றும் சமூக தொடர்புகளுக்கும் இது வழி வகுக்கும்.
தனது நியமனம் குறித்து கருத்து தெரிவித்த, ICL Fincorp இன் CMD திரு. கேஜி அனில்குமார், "லத்தீன் அமெரிக்கன் கரீபியன் பிராந்தியத்தின் குட்வில் அம்பாசிடராக நியமிக்கப்பட்டதற்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன். நாம் அமைத்துள்ள வலுவான அடித்தளத்தின் மீது உருவாக்குவதற்கும், LAC பிராந்தியம் முழுவதிலும் நமது இருப்பை விரிவுப்படுத்திவதற்குமான ஒரு அற்புதமான வாய்ப்பை இந்தப் பொறுப்பு எனக்கு அளித்துள்ளது. இந்தியா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் LAC நாடுகளுக்குப் பரஸ்பர நன்மைகளை வழங்கும் வலுவான வர்த்தக மற்றும் சுற்றுலாத் தொடர்புகளை உருவாக்குவதே எனது தலையாய நோக்கம்." என்று கூறினார்.
டா. இக்பால் கூடுதலாக, "திரு. கேஜி அனில்குமார் அவர்கள் இத்தகைய முக்கியப் பொறுப்பை ஏற்பதில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம். சவால்களைச் சமாளிப்பதற்கும், LAC பிராந்தியத்துடனான நமது உறவுகளின் முழுத் திறனை உணர்ந்து கொள்வதற்கும் நாங்கள் பணியாற்றும்போது அவரது விரிவான அனுபவமும் நிரூபிக்கப்பட்ட தலைமையும் விலைமதிப்பற்றதாக இருக்கும். இந்த நியமனம் இந்த பிராந்தியங்களில் பொருளாதார மற்றும் கலாச்சார கூட்டாண்மைகளை வளர்ப்பதற்கான எங்கள் தொடர்ச்சியான முயற்சிகளில் ஒரு குறிப்பிடத்தக்க படியாகும்."

லத்தீன் அமெரிக்கன் கரீபியன் வர்த்தக கவுன்சில், LAC பிராந்தியத்திற்கும் உலகின் பிற பகுதிகளுக்கும் இடையே பொருளாதார மற்றும் கலாச்சார உறவுகளை மேம்படுத்துவதற்கு திரு. கேஜி அனில்குமார் அவர்களுக்கு வழிகாட்டுவதற்கு அர்ப்பணிப்புடனும் உறுதியுடனும் உள்ளது. மூலோபாய முன்முயற்சிகள் மற்றும் புதுமையான கூட்டுமுயற்சிகள் மூலம், ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட மற்றும் வளமான உலகளாவிய சமூகத்தை உருவாக்குவதை இந்தக் கவுன்சில் நோக்கமாகக் கொண்டுள்ளது.
சர்வதேசத் தொடர்புகளுக்கு வலுவூட்டுதல்
LAC பிராந்தியத்துடனான தனது ஈடுபாட்டை ஆழப்படுத்துவதற்கான LACTCயின் பயணத்தில் இந்த செய்தி வெளியீடு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது. திரு. கேஜி அனில்குமார் குட்வில் அம்பாசிடராக இருப்பதால், வர்த்தகம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்தவும், அதிக சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் கலாச்சார புரிதலை வளர்க்கவும் கவுன்சில் சிறந்த வாய்ப்பைப் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications