Andra Spicy chicken: காரசாரமான ஆந்திரா சிக்கன்.. இப்படி சமைச்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்
Andra Spicy chicken: சிக்கனில் பல வெரைட்டியான உணவுகள் உள்ளன. தமிழகத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு வகையான ருசி உள்ளது. அதுபோலத்தான் ஆந்திரா உணவும். காரசாரமான உணவென்றாலே சட்டென்று நினைவுக்கு வருவது ஆந்திரா உணவுகள்தான். ஆந்திரா ஸ்பெஷல் ஸ்பைசி சிக்கன் ஈஸியாக செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
ஆந்திரா சிக்கன் செய்ய தேவையான பொருள்கள்
சிக்கன் - 800 கிராம்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 200 கிராம்

மஞ்சள் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
மிளகுத்தூள் - 1 டேபிள் ஸ்பூன்
வறுக்கத் தேவையான பொருள்கள்
ஏலக்காய் - 2
பட்டை - 4 சிறிய துண்டு
இலவங்கம் - 6
வரமிளகாய் - 8
கொத்தமல்லி - 1 டேபிள் ஸ்பூன்
பூண்டு - 10 பல்
சோம்பு - 1/2 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1/2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லித் தழை
ஆந்திரா சிக்கன் செய்யும் முறை
1.அடுப்பில் ஒரு கடாயை வைத்து வறுக்க வேண்டிய அனைத்துப் பொருள்களையும் சேர்த்து மிதமான சூட்டில் வறுத்தெடுக்கவும். வறுத்த பொருள்களை ஆறவிட்டு, மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடி செய்து கொள்ளவும். பின்னர், 10 பல் பூண்டை வறுத்து இந்தப் பொடியுடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
2. அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து கழுவி சுத்தம் செய்து வைத்த சிக்கனைப் போட்டு உப்பு, மஞ்சள்தூள், மிளகுத்தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின்னர், 1 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
3. கடாயில் எண்ணெய், நெய் சேர்த்து காய்ந்ததும் பெரிய வெங்காயத்தை சேர்க்கவும். அதில், ஊறவைத்த சிக்கனைப் போட்டு 10 நிமிடம் நன்கு வதக்கிக் கொள்ளவும்.
4. 10 நிமிடம் மூடி போட்டு வேக வைக்கவும். சிக்கன் நன்றாக வெந்ததும் பொடித்து வைத்துள்ள மசாலாத் தூளஐ சேர்க்கவும். சிக்கன் வெந்ததும் கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கினால் காரசாரமான ஆந்திரா சிக்கன் ரெடி.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications