Idli Podi Recipe: இட்லி பொடியை இப்படி செய்துப் பாருங்க… சட்னி, சாம்பார் கேட்கவே மாட்டாங்க!
Idli Podi Recipe In Tamil: உங்கள் வீட்டில் இட்லி பொடி எப்போதும் இருக்கும். ஆனாலும், சாப்பிடும் போது சட்னி, சாம்பார் இல்லாமல் வீட்டிலுள்ளவர்கள் திருப்தியாக சாப்பிட மாட்டார்களா? அல்லது இட்லி பொடியை விரும்பாமல் விட்டு விடுவார்களா? அப்படியானால், ஒருமுறை இந்த ஸ்பெஷல் முறையில் இட்லி பொடி செய்து பாருங்கள்.
சாதாரணமாக பயன்படுத்தும் வெள்ளை உளுந்துக்கு பதிலாக, கருப்பு உளுந்தை பயன்படுத்தினால், அதில் உள்ள சத்துக்கள் முழுமையாக கிடைக்கும். இதனால் இந்த இட்லி பொடி சுவையில் மட்டுமல்ல, ஆரோக்கியத்திலும் சிறந்ததாக இருக்கும். இப்படி செய்த இட்லி பொடி, இட்லி பொடி பிடிக்காதவர்களுக்குக் கூட பிடித்து, மீண்டும் மீண்டும் கேட்டு சாப்பிட வைக்கும். மேலும், சரியாக சேமித்து வைத்தால் ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும்.
இந்த சுவையான மற்றும் சத்தான இட்லி பொடியை எப்படி எளிதாக செய்வது என்று கீழே தெளிவாக பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
கருப்பு உளுத்தம் பருப்பு - 1 கப்
கடலைப் பருப்பு - 1 கப்
வெள்ளை எள்ளு - 1/2 கப்
எண்ணெய் - 1/2 ஸ்பூன் + 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கைப்பிடி
பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
வரமிளகாய் - 25
காஷ்மீரி வரமிளகாய் - 7
பூண்டு - 8 பல்
உப்பு - தேவைக்கு
செய்முறை:
1. முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, கருப்பு உளுத்தம் பருப்பை சேர்த்து பொன்னிறமாக வரும் வரை நன்றாக வறுத்து, ஒரு தட்டில் எடுத்துக் குளிர வைக்கவும்.
2. அதே வாணலியில் கடலைப் பருப்பை சேர்த்து லேசாக நிறம் மாறும் வரை வறுத்து, தனியாக எடுத்து வைக்கவும்.
3. பிறகு வெள்ளை எள்ளை சேர்த்து சற்றே வெடிக்கும் வரை வறுத்து, அதைவும் தனியாக எடுத்து குளிர வைக்கவும்.
4. அடுத்ததாக, அதே வாணலியில் 1/2 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து, கறிவேப்பிலையை போட்டு நன்றாக மொறுமொறுப்பாக வறுத்து எடுத்து வைக்கவும்.
5. பின்னர், மீண்டும் வாணலியில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வரமிளகாய், காஷ்மீரி மிளகாய், பெருங்காயத் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வறுத்து இறக்கி குளிர வைக்கவும்.
6. அனைத்து வறுத்த பொருட்களும் குளிர்ந்த பின், அவற்றை மிக்சர் ஜாரில் போட்டு, அதனுடன் பூண்டு பற்களையும் சேர்த்து நன்றாக மென்மையாக அரைக்கவும்.
7. அரைத்த பொடியை ஒரு தட்டில் போட்டு முழுமையாக குளிர்ந்ததும், காற்று புகாத டப்பாவில் சேமித்து வைத்துக் கொள்ளவும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications