ரேஷனில் துவரம் பருப்பு வாங்கிட்டீங்களா? அப்படின்னா சூப்பரான ஒரு ஸ்நாக்ஸ் ரெசிபி செய்யலாமா?
சென்னை: ரேஷனில் துவரம் பருப்பு வாங்கிவிட்டீர்களா? அப்படியென்றால் இதை வைத்து ஒரு சூப்பர் ஸ்நாக்ஸ் செய்யலாமா? புரதச் சத்து நிறைய இந்த நொறுக்குத் தீனியை எப்படி செய்வது, அதற்கு என்னென்ன பொருட்கள் வேண்டும் என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.

பள்ளி, கல்லூரி, அலுவலகம் முடித்துவிட்டு வருவோருக்கு வந்ததும் பசிக்கும். இதனால் அவர்கள் பஜ்ஜி, போண்டா, வடை உள்ளிட்டவைகளை எதிர்பார்ப்பார்கள்.
என்னதான் மதியம் வைத்த சாப்பாட்டை கொடுத்தாலும் அவர்களுக்கு திருப்தி இருக்காது. கடையில் தினமும் வாங்கிக் கொடுக்கவும் முடியாத சூழல் இருக்கிறது. அதிலும் சுண்டல் உள்ளிட்டவைகளை செய்தாலும் இவர்களுக்கு பஜ்ஜி, போண்டா, வடைதான் தேவைப்படுகிறது.
அந்த வகையில் தினமும் கடலை பருப்பு வடை, உளுந்து வடை போடுவதற்கு பதிலாக துவரம் பருப்பை கொண்டு வடை அல்லது பக்கோடா போடலாம். சாம்பாருக்கு பயன்படுத்தும் பருப்பின் விலை தெரியாமல் போண்டா போட சொல்கிறீர்களா என நீங்கள் கேட்பது எங்களுக்கு கேட்கிறது.
ஆனால் ரேஷனில் கிலோ 40 ரூபாய்க்குக் கிடைக்கும் பருப்பில் கூட இந்த வடையை சுட்டுக் கொடுக்கலாம். இந்த பருப்பில் புரதம் இருப்பதால் அது வயிறு நிரம்பிய ஃபீலிங்கையும் தரும். இதை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு- ஒரு கப்
வெங்காயம்- 2
பச்சை மிளகாய்- 2
கொத்தமல்லி, கறிவேப்பிலை- சிறிதளவு
உப்பு- தேவைக்கேற்ப
எண்ணெய்- பொரிக்க
செய்முறை
- ரேஷன் துவரம் பருப்பை நன்கு 4 அல்லது 5 முறை கழுவி 3 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
- பின்னர் மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து, அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து பிசையவும்.
- வாணலியில் எண்ணெய் காய வைத்து பிசைந்து வைத்த மாவை சிறுசிறு வடைகளாகவோ இல்லாவிட்டால் கிள்ளி கிள்ளி போட்டு போண்டாக்களாகவோ போட்டு சூடாக பரிமாறலாம்.
தொட்டுக் கொள்ள தேங்காய் சட்னி அல்லது கார சட்னி வைக்கலாம். இல்லாவிட்டால் சட்னியே இல்லாமல் அப்படியே சாப்பிட்டாலும் ருசியாக இருக்கும்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications