Butter Chicken: தல தோனியின் ஃபேவரைட் ரெசிபி பட்டர் சிக்கன்.. சப்பாத்தி, ரொட்டிக்கு செம காம்பினேஷன்
Butter Chicken Recipe: சிக்கன் என்றாலே குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். ரொட்டி, சப்பாத்தி, சாதம், பிரியாணி என அனைத்து வகை உணவுக்கும் செம்ம காம்பினேஷனாக இருக்கும். குறிப்பாக, சப்பாத்தி, ரொட்டிக்கு சூப்பர் காம்பினேஷன் என்றால் அது பட்டர் சிக்கன் ரெசிபி தான். தல தோனிக்கும் பட்டர் சிக்கன்தான் ஃபேவரைட்டாம். சரி வாங்க ஹோட்டல் ஸ்டைலில் பட்டர் சிக்கன் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
சிக்கன் - 1 கிலோ
வெங்காயம் - 4
தக்காளி - 4
இஞ்சி, பூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன்
காஷ்மீரி மிளகாய்த் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
மல்லித்தூள் - 1 டேபிள் ஸ்பூன்
தயிர் - 2 ஸ்பூன்
சீரகத்தூள் - 2 ஸ்பூன்
கரம் மசாலா தூள் - 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள்- 2 ஸ்பூன்
கஸூரி மெத்தி சிறிதளவு
கொத்தமல்லி இலை
பட்டர் சிக்கன் செய்வது எப்படி?
1. முதலில் சிக்கனை நன்றாக கழுவி எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எலும்பில்லாத சிக்கன் துண்டுகள், இஞ்சி பூண்டு பேஸ்ட், தயிர், எலுமிச்சை சாறு, மிளகாய்த் தூள், கரம் மசாலா தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலக்கிவிட்டு 30 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
2. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் சேர்த்து சூடானதும், மசாலாவில் ஊறவைத்த சிக்கனைப் போட்டு வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
3. மற்றொரு கடாயில் வெண்ணெய், தேவையான அளவு சமையல் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கிக் கொள்ளவும்.
4. பின்னர், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கி, பொடியாக நறுக்கிய தக்காளி, காஷ்மீரி மிளகாய் தூள், உப்பு, சீரகத்தூள், மல்லித்தூள், கரம் மசாலா தூள் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்க வேண்டும்.
5. அந்தக் கலவையில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின்னர், அதில் 10 முந்திரி பருப்பை சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
7. அடுப்பில் கடாயை வைத்து வெண்ணெய், மிளகாய் தூள் சேர்க்கவும். அதில், அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கலக்கவும்.
8. அந்த மசாலா கலவையில் வேகவைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து பத்து நிமிடத்திற்கு மூடி போட்டு சமைக்க வேண்டும். 10 நிமிடத்திற்குப் பிறகு கஸூரி மெத்தி சேர்த்து, நறுக்கி கொத்தமல்லி இலையையும் தூவிவிட்டால் கமகமக்கும் பட்டர் சிக்கன் தயார்.
-
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம்












Click it and Unblock the Notifications