White Ellu Chutney: வெள்ளை எள் கால் கப் இருந்தால் போதும்! சூப்பரான சட்னி செய்யலாமே!
White Ellu Chutney recipe: வெள்ளை எள்ளை வைத்து சூப்பரான ஒரு சட்னி செய்வது எப்படி என்பதை பார்க்கலாம். வெள்ளை எள் நமது கல்லீரல், சிறுநீரகத்தை பாதுகாக்கிறது, இதயத்தை மேம்படுத்துகிறது. இந்த வெள்ளை எள்ளை அலர்ஜி இருப்போர் பயன்படுத்தக் கூடாது!

தேவையான பொருட்கள்
சிகப்பு மிளகாய்- 4- 5
பச்சை மிளகாய்- 2
இஞ்சி - அரை இன்ச்
பூண்டு 6- 7
வெள்ளை எள்- கால் கப்
புளி- 1 நெல்லிக்காய் சைஸ்
கொத்தமல்லி- ஒரு கைப்பிடி
புதினா இலைகள்- ஒரு கைப்பிடி
தேங்காய்- 2 டேபிள் ஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
தாளிக்க
எண்ணெய்- 2 டீஸ்பூன்
கடுகு- 1 டீஸ்பூன்
சிகப்பு மிளகாய்- 2
கறிவேப்பிலை- சிறிது
செய்முறை
ஒரு கடாயில் சிகப்பு மிளகாய், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, வெள்ளை எள், புளி ஆகியவற்றை எண்ணை ஊற்றாமல் வெறுமனே 2 நிமிடம் வறுக்க வேண்டும்.
பின்னர் அவற்றை ஆற வைத்து அதை மிக்ஸி ஜாருக்கு மாற்றி அத்துடன் கொத்தமல்லி, புதினா, தேங்காய், தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து அரைக்க வேண்டும்.
அந்த கலவையில் மேலே தாளிக்க சொன்னதை தாளித்து கொட்டவும். வெள்ளை எள் உடலுக்கு நல்லது. எனவே இவற்றை வாரத்தில் ஒரு முறை சட்னி அரைத்து கொடுக்கலாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications