Nellikai chutney: நெல்லிக்காய் சட்னி செய்வது எப்படி? இட்லி, தோசைக்கு செம காம்பினேஷன்!
Nellikai chutney recipe: நெல்லிக்காய் ஊறுகாய், ஜூஸ் என சாப்பிட்டிருப்பீர்கள். இந்த நெல்லியை வைத்து ஒரு சூப்பரான சட்னியை எப்படி செய்வது என பார்க்கலாம். ஒரு புளிப்பு, இனிப்பு, துவர்ப்பு சுவையுடன் அட்டகாசமாக இருக்கும்.

நெல்லிக்காயில் விட்டமின் சி இருப்பதால் இது சருமம், முடி ஆகியவற்றுக்கு நன்மையை செய்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது. புற்றுநோய் செல்களை அழிக்கிறது. இந்த நெல்லிக்காயை தினமும் உணவில் சேர்த்தால் சர்க்கரையை கட்டுக்குள் கொண்டு வரும்.
இப்படிப்பட்ட நெல்லிக்காயை கொண்டு ஊறுகாய் போடலாம், தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கலாம். நெல்லிக்காயை தேனில் ஊற வைத்து அதை காய வைத்து சாப்பிட்டு வரலாம்.
இந்த நெல்லிக்காயை வைத்து ஒரு சட்னியை எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
தேங்காய்- அரை கப்
பச்சை மிளகாய்- 4
கொத்தமல்லி- ஒரு கைப்பிடி
பூண்டு -4 பல்
நெல்லிகாய்- 3 (விதை நீக்கியது)
உப்பு- தேவைக்கேற்ப
புளி - சிறிதளவு
செய்முறை
ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய், பச்சை மிளகாய், கொத்தமல்லி, பூண்டு, நெல்லிக்காய், உப்பு , புளி சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளவும்.
பின்னர் எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, சிவப்பு மிளகாய் -2, பெருங்காயம்- கால் டீஸ்பூன் சேர்த்து பொரிந்ததும் சட்னியில் ஊற்றினால் சுவையான சட்னி ரெடி!












Click it and Unblock the Notifications