Javvarisi Vada: சூடான சுவையான ஸ்நாக்ஸ் ரெசிபி! ஜவ்வரிசி வடை செய்வது எப்படி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜவ்வரிசி வடை செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ளலாம். மரவள்ளிக்கிழங்கின் முத்து என அழைக்கப்படும் ஜவ்வரிசி பாயாசம், கிச்சடியும் செய்யலாம். இந்த சிறிய ஜவ்வரிசியில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

மரவள்ளிக்கிழங்கு வேரின் ஸ்டார்ச்சில் இருந்து ஜவ்வரிசி தயாரிக்கப்படுகிறது. அதனால்தான் மரவள்ளிக்கிழங்கு முத்து என ஜவ்வரிசி அழைக்கப்படுகிறது. இந்திய உணவுகளில் பிரதான மூல பொருளாக இந்த ஜவ்வரிசி இருக்கிறது.

recipes javvarisi vada

இந்த ஜவ்வரிசி இதய ஆரோக்கியத்திற்கு உகந்தது. ஜவ்வரிசியில் உள்ள நார்ச்சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ் உள்ளிட்டவை ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதோடு உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவையும் குறைக்கிறது. இதனால் இதய நோய் ஏற்படுவதற்கான அபாயம் தடுக்கப்படுகிறது.

உடல் எடை குறையும். உடல் எடையை குறைக்க விரும்புவோர் ஜவ்வரிசியை உங்கள் டயட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள். கர்ப்பிணிகளுக்கு ஜவ்வரிசி சேர்த்தால் கருவின் வளர்ச்சிக்கு உதவும். மூளையில் உள்ள நினைவுகளை செயல்படுத்தவும் உதவுகிறது.

தேவையான பொருட்கள்

ஜவ்வரிசி- 1 கப்
உருளைக் கிழங்கு- கால் கிலோ
பச்சை மிளகாய்- 4
இஞ்சி- 1 துண்டு
சீரகம் - ஒரு டீஸ்பூன்
கொத்தமல்லி தழை
வேர்க்கடலை 50 கிராம்
எலுமிச்சை பழம்- அரை மூடி
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை

ஜவ்வரிசியில் இரண்டரை கப் தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை வடித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

உருளைக்கிழங்கை மசித்து வேக வைத்துக் கொள்ளவும். பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்க்கவும். பொடியாக நறுக்கிய இஞ்சியை சேர்க்கவும். சீரகம், உப்பு சேர்த்து, கொத்தமல்லி தழையையும் போட்டு, எலுமிச்சை பழத்தையும் பிழிந்து விடவும்.

பின்னர் எல்லாவற்றையும் ஒரு சேர பிசைந்து கொள்ளவும்.

ஒரு கடாயில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய்யை ஊற்றி, அது காய்ந்ததும், மாவை சிறு உருண்டைகளாக உருட்டி, வடை போல் தட்டி எண்ணெயில் போட்டு மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+