Mudakkathan Dosai: உடலுக்கு வலிமை தரும்.. ஆரோக்கியமான முடக்கத்தான் தோசை செய்வது எப்படி?
Mudakathan Dosai Recipe: வீட்டில் தினமும் வழக்கமான இட்லி, தோசை சாப்பிட்டு சலித்துவிட்டதா. உங்களுக்காகவே சற்று வித்தியாசமாகவும், மிகுந்த ஆரோக்கியத்துடனும் சூப்பரான டிபன் முடக்கத்தான் தோசை. மூட்டுவலி, அலர்ஜி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு முடக்கத்தான் சிறப்பான வைத்தியக்காரனாக செயலாற்றும். முடக்கத்தான் தோசை செய்வது எப்படி என்று இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
பரபரப்பான வாழ்க்கை முறையில் நாம் அதிகம் மிஸ் செய்யும் ஒன்று ஆரோக்கியம். துரித உணவுகள் நம் வாழ்க்கை முறையை அதிகம் ஆக்கிரமித்துவிட்டன. உடல் நலம் பாதிக்கப்பட்ட பிறகு தான், இயற்கை உணவுகளை தேடி செல்கிறார்கள். அப்படி சமீப காலமாக சமையலறைகளில் சக்கை போடு போட்டு கொண்டிருக்கிறது முடக்கத்தான் தோசை.

முடக்கத்தான் கீரை மூட்டு வலியை போக்கும், அலர்ஜி, வீக்கம், சளி உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு எதிராக அரு மருந்தாக செயலாற்றும். தோசை பச்சை நிறத்தில் இருப்பதால் குழந்தைகளும் இதை ரசித்து ருசித்து ஆர்வமாக சாப்பிடுவார்கள். வழக்கத்திற்கு மாறான ஆரோக்கியமான டிபன் வகையால் உங்கள் உடலும், மனமும் பலமடையும்.
முடக்கத்தான் தோசை செய்ய தேவையான பொருட்கள்
இட்லி அரிசி - 500 கிராம்
முடக்கத்தான் கீரை - 200 கிராம்
மிளகு - 10 கிராம்
சீரகம் - 20 கிராம்
உப்பு மற்றும் எண்ணெய் - தேவையான அளவு
முடக்கத்தான் தோசை செய்முறை
1. இட்லி அரிசியை ஒரு பாத்திரத்தில் சுமார் 6 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.
2. முடக்கத்தான் கீரையை பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
3. ஊற வைத்த இட்லி அரிசியை நன்றாக கழுவி, வடிகட்டி கிரைண்டிரில் போட வேண்டும்.
4. அரிசியுடன் நறுக்கி வைத்த கீரை, மிளகு, சீரகம், உப்பு, தண்ணீர் ஆகியவற்றை கலந்து அரைக்க வேண்டும்.
5. மாவு நன்கு தோசை பதம் வந்தவுடன் கிரைண்டரை நிறுத்திவிடவும்.
6. வழக்கம் போல தோசைக் கல்லில் எண்ணெயுடன் சுட சுட முடக்கத்தான் தோசை சுட்டு சாப்பிடலாம்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications