Soft Idly: ரேஷன் அரிசியில் இந்த ஒரு பொருளை சேர்த்து மாவு அரைங்க! இட்லி மல்லிகை பூ மாதிரி இருக்கும்!
Soft Idly using Ration rice: இட்லி பஞ்சு போல் மிருதுவாக, அதுவும் ரேஷன் அரிசியில் செய்யணுமா? எப்படி செய்வது என்பதை பார்க்கலாம். இதற்கு என்னென்ன அளவுகளில் பொருட்கள் தேவை என்பதை பார்க்கலாம்.

இட்லி, தோசைக்கு மாவு அரைப்பது என்பது பலருக்கு சவாலான காரியம்தான். அதிலும் இட்லிக்கு மாவு அரைத்து அதை வார்க்கும் போது இட்லி மெத்துனு வருமா வராதா என்ற சந்தேகங்கள் எழும்.
இதற்காக விலை உயர்ந்த இட்லி அரிசி, உருட்டு உளுந்தை வாங்கி பயன்படுத்துவார்கள். இன்னும் சிலர் அதிகளவில் உளுந்தை பயன்படுத்துவார்கள். ஆனால் சாதாரண சாலையோர கடைகளில் கூட இட்லி பஞ்சு போல் வருகிறது. நம் வீட்டில் ஏன் வரவில்லை என கேள்விகள் எழத்தான் செய்யும்.
காஸ்ட்லி அரிசி வாங்காமல் ரேஷன் அரிசியிலேயே இட்லி, தோசை செய்வது எப்படி என்பதை பார்க்கலாம். அதிலும் மிக்ஸியில் அரைத்தால் கூட சூப்பராக வரும்.
தேவையான பொருட்கள்
ரேஷன் புழுங்கல் அரிசி- 3 டம்ளர்
ரேஷன் பச்சை அரிசி- 1 டம்ளர்
உளுந்து- ஒரு டம்ளர் அரிசிக்கு கால் பங்கு வீதம் 4 டம்ளருக்கு ஒரு டம்ளர் உளுந்து
வெந்தயம்- சிறிது
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை
பச்சை, புழுங்கல் அரிசியை நன்கு 4, 5 முறை கழுவி அத்துடன் வெந்தயத்தை சேர்த்து 4 மணி நேரம் வைத்துவிடுங்கள்.
அது போல் உளுந்தையும் நன்கு கழுவி, மாவு அரைப்பதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பு ஊற வைத்தால் போதுமானது.
ஊறிய உளுந்தை அப்படியே பாத்திரத்துடன் ப்ரீஸரில் வைத்துவிடவும்.
மிக்ஸியில் அரிசியை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு ரவை பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும். அதை ஒரு பாத்திரத்தில் வழித்து வைத்துவிட்டு ப்ரீசரில் வைத்த உளுந்தை எடுத்து சிறிது சிறிதாக தண்ணீரை சேர்த்து வெண்ணெய் போல் வழுவழுவென அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதையும் அரைத்த அரிசிமாவுடன் சேர்த்து உப்பு போட்டு கைகளாலேயே கலந்து விடுங்கள். பிறகு 8 மணி நேரம் புளிக்க விடவும். அப்புறம் இட்லி ஊற்றினால் பூப்போல் இருக்கும்.
மிக்ஸியில் அரைப்பதால் மாவு சூடாவதை தடுக்க உளுந்தை ப்ரீசரில் வைத்து அரைக்கிறோம். இடம் இருந்தால் ஊறவைத்த அரிசியையும் ப்ரிட்ஜில் வைத்து அரைத்துக் கொள்ளலாம். இல்லாவிட்டால் ஐஸ் கட்டிகளை சேர்த்து அரைக்கலாம். இந்த இட்லிக்கு சாம்பார், கார சட்னி, தேங்காய் சட்னி, புதினா சட்னி, கொத்தமல்லி சட்னி, பாம்பே சட்னி, இட்லி மிளகாய் பொடி வைத்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications