Veg Omelette: முட்டை ஆம்லெட் சாப்பிட முடியலையா! ஐயப்பனுக்கு விரதமா? வெஜ் ஆம்லெட் செய்யலாமா?
Veg Omelette recipe: புரட்டாசி மாதம், கார்த்திகை மாதங்களில் பலர் அசைவ உணவுகளை சாப்பிட மாட்டார்கள். அந்த அளவுக்கு கட்டுப்பாடாக இருப்பார்கள். ஆனால் சிலருக்கு எங்காவது ஆம்லெட்டை பார்த்துவிட்டால், நாக்கு ஊறும் (தவறு இல்லை, ஆனாலும் கட்டுப்பாடு என்பது அவசியம்)!

ஐயோ தெய்வ குத்தமாகிவிடுமே என்ற அச்சமும் இருக்கும். இதுபோன்ற விரத காலங்களில் ஆம்லெட்டை போன்றே சுவையை கொடுக்கக் கூடிய ஒரு ரெசிபியை செய்யலாம்.
தேவையான பொருட்கள்
வெள்ளை கொண்டைகடலை- 1 கப்
வெங்காயம்- 2
பச்சை மிளகாய்- 2
மிளகு தூள்- அரை டீஸ்பூன்
எண்ணெய்- தேவைக்கேற்ப
உப்பு- தேவைக்கேற்ப
கொத்தமல்லி, கறிவேப்பிலை- சிறிது
செய்முறை
வெள்ளை கொண்டைக் கடலையை இரவு ஊற வைத்துக் கொள்ளுங்கள்.
இந்த கொண்டைக் கடலையை நைஸாக அரைத்துக் கொள்ளுங்கள்.
பிறகு ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து, கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்க்கவும்.
பிறகு அரைத்த கொண்டை கடலையை அதில் ஊற்றி, உப்பு, மிளகு தூள் சேர்த்து ஆம்லெட் பதத்திற்கு தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு வாணலியில் எண்ணெய் தடவி, ஒரு கரண்டி மாவை ஊற்றி நன்றாக பரப்பிவிடவும், பின்னர் எண்ணெய் ஊற்றி இரு பக்கமும் வேக வைத்துவிடுங்கள். இது சாப்பிடுவதற்கு அப்படியே ஆம்லெட் போல் இருக்கும். புரதச் சத்தும் கிடைக்கும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications