Restaurant style Japan Chicken: ஜப்பான் சிக்கன் வீட்டிலேயே ஈஸியா செய்யலாம்.. டேஸ்ட் சும்மா அள்ளும்
Japan Chicken Recipe: சிக்கனில் ஏராளமான வெரைட்டிகள் உள்ளன. சிக்கன் கிரேவி, சிக்கன் பக்கோடா, சில்லி சிக்கன், சிக்கன் 65, பள்ளிபாளையம் சிக்கன், செட்டிநாடு சிக்கன், சிக்கன் சிந்தாமணி, சிக்கன் கோலா உருண்டை என பல வகைகளை செய்து சாப்பிட்டிருப்பீங்க. ஒருமுறை இந்த ஜப்பான் சிக்கனை ட்ரை பண்ணி பாருங்க. வாரம்தோறும் வேணும்னு கண்டிப்பா உங்க குழந்தைங்க கேட்பாங்க. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் ஜப்பான் சிக்கன் வீட்டிலேயே எளிமையாக எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

ஜப்பான் சிக்கன் செய்யத் தேவையான பொருட்கள்
சிக்கன் - 1 கிலோ
முந்திரி பருப்பு - 400 கிராம்
பால் - 400 மில்லி லிட்டர்
மைதா - 2 கப்
சோள மாவு - 2 கப்
மிளகு தூள் - 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 10
பூண்டு - 20 பல்
வெண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
ஜப்பான் சிக்கன் செய்வது எப்படி?
1. முதலில் சிக்கனை நன்றாக கழுவி பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
2. ஒரு அகலமான பாத்திரத்தில் மைதா, சோள மாவு, சிக்கன், மிளகுத்தூள், தேவையான அளவு உப்பு போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு பிசைந்து கொள்ளவும்.
3. அடுப்பில் கடாயை வைத்து சமையல் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும். எண்ணெய் காய்ந்ததும் சிக்கனைப் போட்டு பொரித்தெடுக்கவும்.
4. அடுப்பில் இன்னொரு கடாயை வைத்து அதில் வெண்ணெய் சேர்க்கவும். வெண்ணெய் உருகியதும் பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும்.
5. அந்த கலவையில் பாலை சேர்த்துக் கொதிக்க வைக்க வேண்டும். பால் நன்றாக கொதித்ததும் முந்திரிப் பருப்பை மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த விழுதை பாலுடன் சேர்த்து திக்காக மாறும் வரை கிளற வேண்டும்.
6. பின்னர், அந்தக் கலவையில் சிக்கனைப் போட்டு கிளறி பரிமாறினால் ரெஸ்டாரண்ட் ஸ்டைல் ஜப்பான் சிக்கன் தயார்.
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications