Mathi meen kuzhambu recipe: கேரளா ஸ்பெஷல் மணமணக்கும் மத்திமீன் குழம்பு... இப்படி செய்து பாருங்க
சென்னை: கேரளாவில் மீன் குழம்பு என்பது மிகவும் பேமஸ்.. மீன் ஃபிரைக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் இருந்தாலும் கேரள மாநிலத்தில் பொதுவாக பலரும் விரும்புவது மீன் குழம்பைத்தான். குழம்பில் போட்ட மீனுக்குத்தான் சுவை அதிகமாம். தேங்காய் எண்ணெய், குடம்புளி இவை இரண்டும் தான் இந்த கேரள மீன் குழம்பின் ஸ்பெஷல். வாங்க.. கேரளா ஸ்பெஷல் மணமணக்கும் மத்திமீன் குழம்பு எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.
மத்திமீன் பார்க்க மிகவும் சிறியதாக இருந்தாலும் அதில் கொட்டிக் கிடக்கும் சத்துக்கள் ஏராளம். மத்திமீனை குழம்பு, வறுவல், ஃபிரை, அவியல் என வகை வகையாக செய்யலாம். மத்தி மீனில் ஏராளமான ஊட்டச் சத்துக்கள் இருக்கின்றன. 100 கிராம் மத்திமீனில் 25.4 கிராம் புரோட்டீன் சத்து, 7.8 கிராம் கொழுப்பு, 60 கிராம் மத்தியில் 217 மில்லி கிராம் கால்சியம் சத்து உள்ளது. ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் டி, செலீனியம், அயோடின், பொட்டாசியம், வைட்டமின் பி 12 என ஏராளமான சத்துக்கள் நிறைந்து கிடக்கின்றன.

அப்புறம் என்ன ஆரோக்கியம் நிறைந்த, அதே நேரத்தில் ருசியான இந்த மத்திமீன் குழம்பை உங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கும், அன்புக் கணவருக்கும் சமைத்துக் கொடுத்து அசத்துங்க..
தேவையான பொருட்கள்
மத்தி மீன் - அரை கிலோ
தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
வெந்தயம் - 1 டேபிள் ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 3
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
மல்லி தூள் - 3 டேபிள் ஸ்பூன்
கருவேப்பிலை - சிறிதளவு
தேங்காய் விழுது - 50 கிராம்
குடம்புளி கரைசல் - 50 கிராம்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
1. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் சூடானதும் கடுகு, சீரகம், வெந்தயம் சேர்க்கவும். பிறகு சின்ன வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
2. பின்னர் தக்காளி, கருவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
3. தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித் தழை சேர்த்து நன்றாக வதக்கவும்.
4. முக்கிய பொருளான குடம்புளிக் கரைசல் மற்றும் தேங்காய் விழுதும், குழம்பிற்குத் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொத்திக வைக்கவும்.
5. குழம்பு நன்றாக கொதி வந்ததும் சுத்தம் செய்து வைத்துள்ள மத்தி மீனை சேர்த்து ஒருமுறை கிளறிவிடவும். பத்து முதல் 15 நிமிடம் வேகவிட்டால் சுவையான மத்தி மீன் குழம்பு ரெடி.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications