Millet Laddu: குட்டீஸ்களுக்கான ஹெல்தி ஸ்நாக்ஸ்.. திணை லட்டு ஈஸியா செய்யலாம்
Thinai Laddu Recipe: உங்க குட்டீஸ்களின் ஸ்நாக் பாக்ஸை ஆரோக்கியமாகவும், அதே நேரத்தில் செம்ம டேஸ்டாகவும் கொடுத்து அனுப்ப யோசிச்சுகிட்டு இருக்கீங்களா. உங்களுக்காகத்தான் இந்த தினை லட்டு ரெசிபி.. வாங்க எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.
பண்டைய காலத்தில் சிறுதானியங்களே நம் முன்னோர்களின் முக்கிய உணவாக இருந்து வந்தது. நாளடைவில் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளுக்கு பழக்கமாகி விட்டோம். இப்போதுள்ள இளைய தலைமுறையினருக்கு திணை, வரகு, சாமை, குதிரைவாலி என்ற வார்த்தைகளை கேட்டாலே இதெல்லாம் எங்கோ கேட்டது போல உள்ளது என்கிற சூழலுக்கு நாம் வந்துவிட்டோம்.

உடலுக்கு ஆரோக்கியத்தையும், வலிமையையும் கொடுக்க கூடியது சிறுதானிய உணவுகளே. ஆனாலும், சிறுதானியம் என்றதும் சமைப்பதற்கு கடினமாக இருக்குமோ என்கிற கவலையே வேண்டாம். இட்லி, தோசை, பொங்கல் முதல் பிரியாணி, நூடுல்ஸ் வரை சிறுதானியங்களைக் கொண்டு விதவிதமாக ஈஸியாக சமைக்கலாம். இதுமட்டுமல்ல குட்டீஸ்களுக்கான ஸ்நாக்ஸ் வகைகளும் ஏராளமானவை உள்ளன.
திணை லட்டு, சாமை முறுக்கு, தினை முறுக்கு, மிக்சர், சிப்ஸ், ராகி வடை, கொழுக்கட்டை, கஞ்சி, லட்டு என பல வெரைட்டிகள் உள்ளன. உங்க குட்டீஸின் ஸ்நாக் பாக்ஸுக்கு ஏற்ற திணை லட்டு ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க.
திணை லட்டு செய்யத் தேவையான பொருட்கள்
திணை - ஒன்றரை கப்
பொடித்த வெல்லம் - 1 கப்
ஏலக்காய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
சுக்குப்பொடி - 1/4 டேபிள் ஸ்பூன்
நெய் - 5 டேபிள் ஸ்பூன்
பாதம் - கால் கப்
வால்நட் - கால் கப்
முந்திரி - கால் கப்
திணை லட்டு செய்வது எப்படி?
1. முதலில் திணையை நன்றாக சுத்தம் செய்து 2 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
2. பின்னர், ஊற வைத்துள்ள அரிசியை நன்றாக தண்ணீர் இல்லாமல் வடித்துக்கொள்ளவும்.
3. ஒரு துணியில் அரிசியை பரப்பி இரண்டு மணி நேரம் ஃபேன் காற்றில் காயவைக்கவும்.
4. அடுப்பில் கடாயை வைத்து திணை அரிசியை சேர்த்து நன்றாக வறுத்தெடுக்கவும்.
5. மற்றொரு கடாயில் நெய் சேர்த்து முந்திரி, பாதம், வாஸ்நட்ஸ் சேர்த்து வறுத்தெடுத்துக்கவும்.
6. ஆறிய திணை அரிசியை மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக பொடியாக்கி கொள்ளவும்.
7. திணை அரிசி பொடியை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் வறுத்து வைத்துள்ள நட்ஸ், பொடித்த வெல்லத்தை சேர்க்கவும்.
8. அதில், ஏலக்காய் தூள், சுக்குப்பொடி சேர்த்து கலந்து கொள்ளவும்.
9. பின்னர், கொஞ்சம் கொஞ்சமாக நெய் சேர்த்து நன்கு கலந்துவிட்டு உருண்டை பிடிக்கும் பக்குவத்திற்கு கொண்டு வரவும்.
10. நன்றாக அழுத்தி உருட்டி லட்டாகப் பிடித்து எடுத்தால் சுவையான திணை லட்டு ரெடி.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications