Nandu Gravy: சாதம், சப்பாத்திக்கு சுருக்குன்னு இருக்கும்.. பொள்ளாச்சி நண்டு கிரேவி
சென்னை: சிக்கன் மட்டன்னு சாப்பிட்டு வெறுத்து போயிட்டீங்களா. சாதம், சப்பாத்தி, இட்லி, தோசை என எல்லா உணவுக்கும் பொருந்து பொள்ளாச்சி நண்டு கிரேவியை ஈஸியாக எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம் வாங்க..
என்னதான் சிக்கன், மட்டன்னு சாப்பிட்டாலும் கடல் உணவு, கடல் உணவுதான். அதிலும் குறிப்பாக நண்டு கிரேவியை அடிச்சுக்க யாராலும் முடியாது. மழைக்காலம் தொடங்கியாச்சு. இனி கண்டிப்பா வீட்டில் இருப்பவர்கள் சளி, தும்மல், இருமல் என்று ஆரம்பிப்பார்கள். அவற்றை விரட்ட கண்டிப்பாக நண்டு மிகவும் ஏற்றதாக இருக்கும். நண்டு ஆரோக்கியம் மிகுந்த உணவாகும். இது உடலுக்கு பலவிதமான நன்மைகளைத் தருகிறது. நண்டு கிரேவியை சாதம், சப்பாத்தி, இட்லி, தோசை என அனைத்து உணவுக்கும் சூப்பர் சைடிஸாக இருக்கும். வாங்க அதன் செய்முறையை பார்க்காலம்.

தேவையான பொருள்கள்
நண்டு - 1 கிலோ
சின்ன வெங்காயம் - 100 கிராம் அல்லது 1 பெரிய வெங்காயம்
தக்காளி - 2
குழம்பு மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
கருவேப்பிலை
பூண்டு - 10 பல்
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் தேவையான அளவு
மல்லி தூள் -3 ஸ்பூன்
அரைப்பதற்குத் தேவையான பொருள்கள்
தேங்காய்
மிளகு - 2 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
சோம்பு - 1/2 ஸ்பூன்
செய்முறை
1. முதலில் மஞ்சள் தூள், கல் உப்பு சேர்த்து நண்டை நன்றாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
2. மிளகு, சோம்பு, தேங்காய் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும்.
3. வாணலியில் எண்ணெய் விட்டு சோம்பு, பூண்டு, வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
4. வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும், அதில் தக்காளி சேர்த்து வதக்க வேண்டும்.
5. பின்னர் மஞ்சள் தூள், மிளகாய் தூள், குழம்பு மிளகாய்த்தூள், மல்லி தூள் சேர்த்து கிளறவும்.
6. அதில் சுத்தம் செய்து வைத்த நண்டை சேர்க்கவும்.
6. தேங்காய், மிளகு, சோம்பு சேர்த்து அரைத்த விழுது, தண்ணீர், கல் உப்பு சேர்த்து வதக்கவும்.
7. மசாலாவுடன் நண்டு நன்றாக கலந்த பின்னர் 10 முதல் 15 நிமிடம் கொதிக்க விடவும்.
8. தேவையெனில் காரத்திற்கு ஏற்ப மிளகுத்தூள் சேர்த்துக் கொள்ளலாம். பின்னர், கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். சுவையான நண்டு கிரேவி தயார்
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications