Pallipalayam Chicken: காரசாரமான பள்ளிபாளையம் சிக்கன்.. இப்படி சமைச்சு பாருங்க..டேஸ்ட் சும்மா அள்ளும்
How to make pallipalayam chicken: சிக்கன் உணவில் பல வெரைட்டிகள் இருந்தாலும் கொங்குநாட்டு ஸ்பெஷல் பள்ளிபாளையம் சிக்கன் கறி எப்படி செய்வது என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சிக்கனில் பல வெரைட்டியான உணவுகள் உள்ளன. தமிழகத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு வகையான ருசி உள்ளது. கொங்கு உணவுக்கென்று ரசிகர் பட்டாளமே உள்ளது. அரிசிம்பருப்பு முதல் சிந்தாமணி சிக்கன் வரை அத்தனையும் சுவையாக இருக்கும். கொங்கு மண்டல உணவுகளில் பள்ளிபாளையம் சிக்கனும் ஒன்று. இதனை செய்வதற்கு குறைந்த நேரமே செலவாகும். ஈஸியாக பள்ளிபாளையம் சிக்கன் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

பள்ளிபாளைம் சிக்கன் செய்ய தேவையான பொருட்கள்
சிக்கன் - 1/2 கிலோ
சின்னவெங்காயம் - 15
காய்ந்தமிளகாய் - 15
கருவேப்பிலை
பூண்டு - 20 பல்
இஞ்சி சிறிதளவு
பச்சை மிளகாய் - 3
இஞ்சி பூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள்
நல்லெண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டேபிள் ஸ்பூன்
சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்
தேங்காய் - 1 கையளவு
கொத்தமல்லி
செய்முறை
1. முதலில் கோழிக்கறியை நன்கு கழுவி வைத்துக் கொள்ளவும்.
2. பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாயை சேர்த்து நன்கு இடித்து வைத்துக் கொள்ளவும்.
3. சிக்கனில் சிறிதளவு இஞ்சி, பூண்டு விழுதைப் போட்டு நன்கு கழுவிக் கொள்ளவும்.
4. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் சேர்த்து கடுகு தாளிக்கவும். பின்னர், சோம்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்.
5. பின்னர், கிள்ளி வைத்துள்ள காய்ந்த மிளகாய், கருவேப்பிலை சேர்த்து வதக்கி, சின்னவெங்காயம் சேர்க்கவும்.
6. சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கிய பின்னர், நறுக்கிய தேங்காயை சேர்த்து கலந்துவிடவும்.
7. பின்னர், இடித்து வைத்துள்ள பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் கலவையை சேர்த்து நன்கு கலந்து வதக்கவும்.
8. சிக்கன் சேர்த்து நன்கு வதக்கி உப்பு சேர்க்கவும். சிறிதளவு தண்ணீரை சேர்த்து சிக்கனை மூடி போட்டு வேக வைக்கவும். கொத்தமல்லி தூவி அடுப்பை அணைத்தால் ருசியான கமகமக்கும் பள்ளிபாளையம் சிக்கன் ரெடி.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications