Potato Balls: 3 உருளைக்கிழங்கு இருந்தால் போதும்! மழைக்காலத்தில் சூப்பர் ஸ்நாக்ஸ் செய்யலாம்!
(Potato balls Recipe) என்னங்க தமிழகம் முழுவதும் கனமழைக்கு வாய்ப்பிருக்குனு சொல்லியிருக்காங்க! மழைக்கு இதமாக ஒரு சூப்பரான ஸ்னாக்ஸ் செய்யலாமா? இதுக்கு தேவையான பொருட்கள் என்னென்ன, எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.

சாதாரணமாகவே மாலை வேளைகளில் எதையாவது கொரிக்கலாம் என தோன்றும்! அதிலும் மழை காலம் என்றால் கேட்கவே வேண்டாம்!
சூடாக, காரமாக என்ன சாப்பிடலாம் என யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உருளைக் கிழங்கு பால்ஸ் செய்யலாமா, இதற்காக கடைக்கு போய் எந்த சாமானையும் வாங்க தேவையில்லை. வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து செய்யலாம்.
தேவையான பொருட்கள்
உருளைக் கிழங்கு- 3
மிளகுத் தூள்- அரை ஸ்பூன்
கொத்தமல்லி- பொடியாக நறுக்கியது
உப்பு- தேவையான அளவு
சோள மாவு- 3 டீஸ்பூன்
செய்முறை
உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து வைத்துக் கொள்ளுங்கள்.
அதில் மிளகுத் தூள் சேர்த்து, கொத்தமல்லி, உப்பு சேர்க்கவும்.
பின்னர் சோள மாவை சேர்த்து நன்கு பிசையவும்.
வாணலியில் எண்ணெயை காய வைத்து கொள்ளவும்.
கைகளில் எண்ணெய் தடவிக் கொண்டு பிசைந்த மாவை சிறிய நெல்லிக்காய் அளவுக்கு உருட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.
எண்ணெய் சூடானதும் இந்த உருண்டைகளை போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்து எடுத்துக் கொள்ளுங்கள்.
இதில் கார்ன் மாவு போட்டதால் வெளி பகுதி மொறுமொறுப்பாக இருக்கும்.
இதில் சீஸை துருவி போட்டும் பிசைந்து பொரிக்கலாம்.
மிளகுத் தூளுக்கு பதிலாக சாட் மசாலா, கரம் மசாலா போடலாம்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications