Poosanikai Halwa Recipe: பார்த்தாலே சாப்பிடத் தூண்டும் பூசணிக்காய் அல்வா செய்வது எப்படி?
Pumpkin Halwa Recipe: பூசணிக்காயில் ஏராளமான நன்மைகள் உள்ளன. ஆனால், பூசணிக்காயை சிலர் தொடவே மாட்டார்கள். பூசணிக்காய் பிடிக்காது என்கிற சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடத் தூண்டும் ரெசிபி தான் இந்த பூசணிக்காய் அல்வா. ஈஸியாகவும், ருசியாகவும் இருக்கும் இந்த பூசணிக்காய் அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
பூசணிக்காயில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் உடல் எடையை எளிதில் குறைக்க உதவும். புண்களை ஆற்றுவதற்கு, தழும்புகளை நீக்குவதில் பூசணிக்காயின் பங்கு அளப்பரியது. பூசணிக்காயை அடிக்கடி உணவில் சேர்ப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். கண் பார்வையை மேம்படுத்தும். வாயுத் தொல்லை, செரிமானக் கோளாறு போன்றவற்றை நீக்கும்.

வயிறு உபாதைகள், அல்சர் போன்றவற்றுக்கு அருமருந்தாகும். அயர்ச்சியையும் குறைக்கும். அந்த வகையில், ஏராளமான நன்மைகளைத் தரும் இந்த பூசணிக்காயில் அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
பூசணிக்காய் அல்வா செய்யத் தேவையான பொருட்கள்:
பூசணிக்காய் - 1/2 கிலோ
சர்க்கரை - 250 கிராம்
முந்திரி - 15
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் பொடித்து - சிறிதளவு
கேசரி பவுடர் - சிறிதளவு
பச்சை கற்பூரம் - 1 சிட்டிகை
பூசணிக்காய் அல்வா செய்யும் முறை:
1.முதலில் பூசணிக்காயை நன்றாகக் கழுவி, அதன் தோலை சீவிக் கொள்ள வேண்டும்.
2. பூசணிக்காயை நன்றாக துருவிக் கொள்ள வேண்டும். பின்னர், அதில் இருக்கும் தண்ணீரை நன்கு பிழிந்து தனியாக எடுத்துக் கொள்ளவும்.
3. பூசணிக்காயின் சக்கையையும் தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.
4. பின்னர், அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் பூசணிக்காய் தண்ணீரை ஊற்றிக் கொள்ளவும்.
5. தண்ணீர் கொதித்ததும் துருவி வைத்துள்ள பூசணிக்காயை சேர்த்து 5 நிமிடம் வேக வைக்கவும்.
6. பூசணிக்காய் நன்றாக வெந்ததும் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து நன்கு கலந்துவிடவும்.
7. பூசணிக்காயும், சர்க்கரையும் சேர்ந்து நன்கு கலந்துவிட்டு சிறிதளவு கேசரி பவுடர் சேர்த்து 5 நிமிடம் கலக்கவும்.
8. 1 சிட்டிகை உப்பு, தேவையான அளவு நெய் சேர்த்து கைவிடாமல் 5 நிமிடத்திற்கு நன்கு கிளற வேண்டும்.
9. பிறகு, அந்த கலவையுடன் ஏலக்காய் பொடி சேர்த்து கலந்துவிட வேண்டும்.
10. பூசணிக்காய் அல்வா நன்கு வெந்ததும், ஒரு சிட்டிகை பச்சை கற்பூரம் சேர்க்க வேண்டும்.
11. சர்க்கரையும், நெய்யும் சுண்டி வரும்போது அடுப்பை அணைக்கவும். மற்றொரு கடாயில் நெய்யில் முந்திரியை வறுத்து, பூசணிக்காய் அல்வாவில் சேர்த்துக் கிளறினால் சூடான சுவையான வெள்ளைப் பூசணிக்காய் அல்வா ரெடி.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications