Prawn Thokku Recipe: ஆரோக்கியம், சுவை மிகுந்த இறால் தொக்கு செய்வது எப்படி தெரியுமா?
Prawn Thokku Recipe In Tamil: ஞாயிற்றுக்கிழமைகளில் சிக்கன், மட்டன்னு சமைச்சு போரடிருச்சா.. ஆரோக்கியம், சுவை மிகுந்த இறால் தொக்கு எளிமையாக எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க.

தேவையான பொருள்கள்
இறால் - 1/2 கிலோ
பெரிய வெங்காயம் - 250 கிராம்
தக்காளி - 250 கிராம்
மஞ்சள்தூள் - கால் டேபிள் ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டேபிள் ஸ்பூன்
சோம்பு - அரை டேபிள் ஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது - ஒன்றரை டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
கரம் மசாலாத்தூள் - 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 5 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
1. முதலில் இறாலை குடல் நீக்கி நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
2. பெரிய வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாயை நன்கு பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
2. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் எண்ணெய் சூடானதும் சோம்பு சேர்க்கவும். சோம்பு பொறிந்த பின்னர் பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி கொள்ள வேண்டும்.
3. பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு விழுது போட்டு கறிவேப்பிலை, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர், பொடியாக நறுக்கிய தக்காளியைச் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.
4. சிறிது தண்ணீர் சேர்த்து மசாலாவை நன்கு வதக்கி உப்பு சேர்க்கவும். மசாலா வதங்கியதும் அதனுடன் இறால் சேர்த்து சேர்த்து நன்கு கிளறவும்.
5. பின்னர், இறால் வெந்ததும் கொத்தமல்லி தழை சேர்த்து நன்றாகக் கிளறிவிட்டு இறக்கவும். சுவையான கமகமக்கும் இறால் தொக்கு ரெடி.
6. சூடான சாதத்துடன் இறால் தொக்கு பரிமாறி சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும்.


Click it and Unblock the Notifications
