Rasagulla: ஸ்வீட் ப்ரியரா நீங்க.. எல்லோருக்கும் பிடிச்ச "ரசகுல்லா".. வீட்டிலேயே ஈஸியா செய்யலாம்
Rasagulla recipe in tamil: உங்க வீட்டு குட்டீஸ் முதல் பெரியவர்கள் வரை எல்லோரையும் கவரும், வீட்டிலேயே ஈஸியாக செய்யக்கூடிய சுவையான ரசகுல்லா எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம் வாங்க..
பண்டிகை என்றாலே முதலில் நினைவுக்கு வருவது இனிப்புகள், பலகாரங்கள் தான். ஆனால் இப்போதிருக்கும் பரபரப்பான காலகட்டத்தில் முன்புபோல சிரத்தை எடுத்து இனிப்புகள், பலகாரங்கள் செய்வதற்கெல்லாம் யாருக்கும் நேரமில்லை. அதனால், வீட்டில் ஸ்வீட் செய்ய வேண்டும் என்றாலே பெரும்பாலும் எல்லோருடைய தேர்வாகவும் குலாப் ஜாமூன் இருக்கும். கொஞ்சம் வித்தியாசமாகவும், ஈஸியாகவும் ஸ்வீட் செய்யலாம் என்று நினைக்கிறீங்களா.. அப்போ இந்த ரசகுல்லாவை ட்ரை பண்ணி பாருங்க.

ரசகுல்லா செய்யத் தேவையான பொருட்கள்
பால் - 2 லிட்டர்
சர்க்கரை - 300 கிராம்
எலுமிச்சை பழம் - 2
ரசகுல்லா செய்யும் முறை
1. அகலமான பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்சிக் கொள்ளவும். பால் பொங்கி வரும்போது தீயை மிதமாக்கிக் கொள்ளவும்.
2. பாலில் எலுமிச்சை சாற்றை ஊற்றி கிளறிக் கொண்டே இருக்கவும். பால் திரிந்து தண்ணீர் தனியாக பிரிந்து வரும்போது அடுப்பை அணைத்து விடவும்.
3. பின்னர், வெள்ளைத் துணியில் அதனை ஊற்றி ஒரு டம்ப்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு அலசி, வடிகட்டி எடுத்து கொள்ளவும்.
4. தனியாகப் பிரித்த பன்னீரை ஒரு தட்டில் போட்டு நன்கு உதிர்த்துவிடவும்.
5. 10 நிமிடம் அதனை நன்கு பிசைந்தால் பன்னீர் மிருதுவாக இருக்கும். பின்னர், அதனை சிறு சிறு உருண்டைகளாக்கிக் கொள்ளவும்.
6. பின்னர், அகலமான பாத்திரத்தில் சர்க்கரையைப் போட்டு மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊர்றி நன்கு கொதிக்கவிடவும்.
7. நன்கு கொதித்து வரும்போது மிதமான தீயில் வைத்து, அதில் உருண்டையாக்கி வைத்துள்ள பன்னீரை போடவும்.
8. 10 நிமிடங்கள் சர்க்கரை ஜீராவில் மூடி மிதமான தீயில் வைத்து வேக விடவும். பன்னீர் நன்கு வெந்ததும் அதன் அளவு இரண்டு மடங்காக பெரிதாகும்.
9. இப்போது அடுப்பை அணைத்துவிட்டால் சூப்பரான ரசகுல்லா ரெடி.












Click it and Unblock the Notifications